India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாகோடு பேரைக்காவிளையை சேர்ந்தவர் டென்னிஸ்ராஜ் மனைவி ஜெமீலா ரோஸ்(50), இவரது மகள் ஜெசிகாவுக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பிரேமா, நெட்டாங்கோடு தர்மராஜ் ஆகியோர் 3 தவணைகளில் ரூ.7 லட்சம் வாங்கிவிட்டு வேலை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து ஜெமீலா ரோஸ் அளித்த புகாரின் மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காட்டாத்துறை கவியல்லூர் சட்டக்கல்லூரி மாணவர் சிஜோ(25). இவரும் மாலியில் வேலை பார்க்கும் துண்டத்துவிளையை சேர்ந்த அபினேஷ்(22) ஆகிய இருவரும் நேற்றிரவு (செப்.1) மோட்டார் சைக்கிளில் காஞ்சிரகோடு பகுதியில் சென்றபோது சிராயன்குழியில் கனிமவளம் கொண்டுசென்ற லாரியில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய (செப்.2) நீர் இருப்பு விவரம்; 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.84 மற்றும் 13.94 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 43.58 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 69.25 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23.1 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15 அடி நீரும் இருப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (செப்.2) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அவ்வப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று கூறுகையில், “பாரதிய ஜனதா ஆட்சியில் ரயில்வே துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. தற்போது சென்னை – நாகர்கோவிலுக்கு தினசரி வந்தே பாரத் வந்துள்ளது. விரைவில் குமரி – காஷ்மீர் இடையே வந்தே பாரத் இயக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். குமரி – மதுரை ரயில் பாதை பணி முடிவடைந்ததும் கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும்” என்றார்.

சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில், கன்னியாகுமரி.எம். பி. விஜய் வசந்த் மற்றும் நாடார் மகாஐன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆகியோர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன், நெல்லை மாவட்ட நாடார் மகாஐன சங்க நெல்லை மாவட்ட தலைவர் ஜெ. தங்கராஜ், அன்பு வனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ஆகியோர் இருந்தனர்.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று (ஆக.31) ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் தலைமையில், மேயர் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாகர்கோவில் & தக்கலை வட்ட கால்நடை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியினை துவங்கி வைத்தார். கால்நடைகளுக்கு மருத்துவ தேவை ஏற்பட்டால், விவசாயிகள் 1962 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாகனம் அங்கு வந்து மருத்துவ சேவை வழங்கும்.

குமரிமாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 13.78மற்றும் 13.87அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 43.47 அடி நீரும்,77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 69.35அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15 அடி நீரும் இருப்பு உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை பேச்சிப்பாறை அணைக்கு 694 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 381 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 996 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 477 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. இன்று அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. இன்று காலை 6:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறையில் 1, சிற்றாறு ஒன்று 7, மயிலாடி 7.4, கொட்டாரம் 6.2, ஆணைக்கிடங்கு 4.2, இடைக்கோடு 4, நாகர்கோவில் 4.7, கோழிப்போர் விளை 4, பூதப்பாண்டி 1.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி அணை பகுதியில் மழை பெய்யவில்லை.
Sorry, no posts matched your criteria.