India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் முழுக்க 1528.5 மிமீ மழை பதிவாகி உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு 1239 கன அடி தண்ணீர் உள்ள வரவாக உள்ளது . 45.25அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 51.3 அடியாக உயர்ந்துள்ளது. 18 அடி கொள்ளவு கொண்ட சிற்றாறு 1 அணை 12.46 அடியாகவும் சிற்றாறு 2 அணை 12.56 அடியாகவும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது .
குமரி: சில வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைக்காலம், இரவு நேரங்களில் செப்டிக் டேங்க்கிற்கு கழிவுகள் செல்வதை தடுத்து, மாற்று குழாய்கள் மூலம் மழைநீர் வடிகாலில் விட்டு வருகின்றனர். ஆய்வின் போது இதை கண்டு பிடித்தால் முதலில் ₹50,000, 2வது முறை சிக்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாக குறைந்து சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்செடி காணப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 12.46, 12.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.25 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 51.3.அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 2.7அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4 அடி நீரும் இருப்பு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.23) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதலை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியிலுள்ள அரசு கலை கல்லூரி அருகில் சாலையில் மரம் விழுந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமை வகித்தார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் விதி முறைகள் குறித்து அலுவலர்களிடம் எடுத்துரைத்தார்.
குமரி மாவட்ட பிரிவு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியதாவது, அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரோ, தகவலை நேரிலோ, கைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 9445048977, ஆய்வாளர்கள் 9498131914, 9442233856 ,9498193388 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
குமரியில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு (மே.23 – 25) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடுவதால், மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.