Kanyakumari

News September 4, 2024

குமரியில் கடலில் குளிக்க தடை

image

கன்னியாகுமரியில் இன்று காலை ஒருபுறம் கடல் சீற்றமாகவும் மறுபுறம் கடல் உள்வாங்கியும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் வெளியேற்றினர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

News September 4, 2024

சாலையை அளந்து பார்த்து ஆய்வு செய்த அமைச்சர்

image

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , பால்வளத்துறை அமைச்சர். த.மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் த.ஆர். அழகுமீனா, முன்னிலையில், இன்று (செப்.4) காலை 8.30 மணிக்கு மார்த்தாண்டம் மேம்பாலத்தினை ஆய்வு மேற்கொண்டனர். அளவு மீட்டர் டேப் வைத்து சாலையின் அகலத்தினை அளவீடு செய்தனர்.

News September 4, 2024

குமரி மாவட்டத்தில் முந்திரி விலை வீழ்ச்சி 

image

குமரி மாவட்டத்தில் முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில், தோட்டுடன் கூடிய முந்திரி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொதுவாக தோட்டுடன் கூடிய முந்திரி 200 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால் வரத்து அதிகமாக உள்ளதால் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அரசு தோட்டுடன் கூடிய முந்திரியை 200 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

News September 4, 2024

கன்னியாகுமரி ஹவுரா ரயில் செப்.7ம் தேதி ரத்து

image

கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து பல ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஹவுரா ரயிலும்,  இம்மாதம் 7ம்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 4, 2024

மசாஜ் சென்டர்களை கண்காணிக்க எஸ்.பி உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தங்கள் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களை கண்காணிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டு உள்ளார்.

News September 4, 2024

பொங்கல் பண்டிகை ரயில்வே டிக்கெட் முன்பதிவு

image

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி இம்மாதம் 12ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சொந்த ஊருக்கு சென்று வருபவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று நாகர்கோவில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 4, 2024

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு -ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும் தாழக்குடி சமுதாய நலக்கூடத்திலும் நாளை (5ம் தேதி) நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்

News September 4, 2024

இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்

image

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல மாதங்களாக சாலை மோசமாக பழுதடைந்துள்ளது. இன்று அமைச்சர் வேலு ஆய்வு செய்ய வருவதை ஒட்டி நேற்று இரவு தற்காலிகமாக மண் போட்டு நிரப்பி தார் போடும் பணி நடந்தது. இதுவரை பழுது பார்க்காமல் திடீரென அமைச்சர் வருகைக்காக தார் போடுவதால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தார் போடுவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

News September 4, 2024

அமைச்சர் எ.வ. வேலுக்கு வரவேற்பு

image

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் எம்எல்ஏ, ஆஸ்டின் உட்பட திமுகவினர் வரவேற்றனர்.

News September 4, 2024

குமரியில் 401 வழக்குகள் பதிவு

image

குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் – சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு, கலப்பட புகார்களை foodsafety.tn.gov.in என்ற இணையத்தளத்திலும் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் கூறினார்

error: Content is protected !!