Kanyakumari

News May 26, 2024

போதை பொருள் விற்பனை பற்றி தகவல் தெரிவிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது ரமணா படத்தில் வரும் காட்சியுடன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மீம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கஞ்சா குட்கா போதை பொருட்கள் விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் 70103-63173 என்ற எண்ணுக்கு காலை 7 முதல் மாலை 6 மணி வரை தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

News May 26, 2024

உயர் நீதிமன்ற நீதியரசர் குமரிக்கு வருகை

image

குமரி மாவட்டம்
மாவட்ட தலைமை நீதிமன்றம் மற்றும் வளாகத்தை பார்வையிட உயர்நீதிமன்ற நீதியரசர் விஜயக்குமார் நேற்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு நீதியரசரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

News May 25, 2024

குமரி: அடுத்த 3 நாள்களுக்கு எச்சரிக்கை!

image

குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு (மே.25-27) பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News May 25, 2024

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

image

தேசிய அளவில் வீர, தீர செயல்புரிந்தோருக்கு 2023-ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கபடுகிறது. 2021 முதல் 2023 வரை சாகசம் செய்தவர்கள் விண்ணப்பத்தை https://awards.gov.in -ல் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நாகர்கோவில் விளையாட்டு அலுவலகத்தில் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகவலுக்கு 04652 262060 என்ன எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (25.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 25, 2024

குமரியில் 10 செ.மீ மழைப்பதிவு!

image

கன்னியாகுமரியில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மைலாடியில் 10 செ.மீட்டரும், மாம்பழத்துறையாற்றில் 9 செ.மீட்டரும், அணைகெடங்கு, பாலமோர், துக்களாய் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், கொட்டாரம், நாகர்கோயில், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், முள்ளங்கினாவிளையில் 6 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 25, 2024

குமரி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாகர்கோவில்-மங்களூரு இடையே பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிது. இந்த ரயில் தினமும் காலை 4.15 மணிக்கு நாகர்கோயிலில் இருந்து புறப்பட்டு, இரவு 9.10 மணிக்கு மங்களூருவை அடையும். மங்களூருவிலிருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இந்த ரயில் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்படுவதாகவும், பெட்டிகளின் எண்ணிக்கை கூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

காவலர் வீட்டில் நகை கொள்ளை

image

கன்னியாகுமரி, நாகர்கோவில் அடுத்த மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயூதப்படை குடியிருப்பில் வசிக்கும் காவலர் சில்வான் என்பவரது வீட்டில் இன்று மூன்றரை பவுன் நகை கொள்ளை நடந்துள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர்கள் மட்டுமே குடியிருக்கும் காவலர்கள் குடியிருப்பில் நகைகள் திருட்டு போன சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 24, 2024

விபத்தில் சிக்கி மாணவன் பலி

image

கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் அருகே நேற்று திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இதில் மேக்கோடு இலந்தைவிளை பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் ஜெரின் (17) படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News May 24, 2024

குமரியில் மழைக்கு வாய்ப்பு

image

குமரி மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!