India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நித்திரவிளையை சேர்ந்தவர் சஜின்ளி . இவரது மனைவி ஷானிகா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு வீட்டில் மயங்கி கிடந்த ஷானிகாவை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து ஷானிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல். 19 அன்று நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டமன்ற அதிமுக வேட்பாளராக மகளிரணி துணைச்செயலாளர் கன்னியாகுமரி சிறுபான்மை கிறிஸ்தவ மகளிர் முன்னேற்ற சங்க கெளரவ தலைவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பசிலியா நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர வைப்பறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று(மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குளச்சலை சேர்ந்த சூசைராஜ் மகன் ஜோனி(32). மீன் வியாபாரியான இவர் நேற்று பைக்கில் வாணியக்குடியில் இருந்து முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எதிரே குளச்சல் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ஜோனியின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜோனி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என குமரி எஸ்பி தெரிவித்துள்ளார். இதற்காக, எஸ்பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் மொபைல் எண்ணை(70103 63173) தொடர்புகொள்ளலாம் என எஸ்பி சுந்தரவதனம் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் தனது விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை, குமரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.