Kanyakumari

News May 29, 2024

கன்னியாகுமரி கோவிலில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

image

பிரதமர் மோடி நாளை (30)மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று (29) கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர் .

News May 29, 2024

புதுமைப்பெண் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் 
புதுமைப்பெண் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1,000/- அவர்களின் வங்கி
கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் 161 கல்லூரிகளிலிருந்து 3693 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

கன்னியாகுமரியில் டிரோன் கேமரா பறக்க தடை

image

பிரதமர் நரேந்திரமோடி தியானம் மேற்கொள்வதற்காக நாளை  கன்னியாகுமரி வருகிறார். தொடர்ந்து மே.30, 31, ஜூன்.1 ஆகிய தேதிகளில் குமரியில் தங்குகிறார் இதனை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யும் 3 நாட்களும் டிரோன்கள் பறக்க குமரி மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

News May 29, 2024

குமரி பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

image

பள்ளிகல்வி இயக்குநர் குமரி கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “பள்ளி திறந்த பின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடக்கும் காலை வணக்க கூட்டத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். செவ்வாய் தோறும் காலை கூட்டத்தில் 6 -12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு தகவல்கள் சார்ந்த பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதை இடம் பெற வேண்டும்” என குறிபிட்டுள்ளார்.

News May 28, 2024

கன்னியாகுமரி வட்டக்கோட்டை வரலாறு!

image

கன்னியாகுமரியில் உள்ள வட்டக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோட்டையாகும். இது திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கட்டப்பட்டது. 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட, இக்கோட்டையினுள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

News May 28, 2024

குமரியில் மழைக்கு வாய்ப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று லேசான மழை பெய்தது. மேலும், கடலோரப் பகுதியில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

News May 28, 2024

குமரி மழைப்பதிவு விவரம்!

image

கன்னியாகுமரியில் நேற்று (மே.27) பெய்த மழைப்பொழிவு விவரம்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், சுருளக்கோடு, திற்பரப்பு, பாலமோர், புத்தன் அணை, முள்ளங்கினவிளை, காளியல் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், சித்தாறு-I, குழித்துறை, துக்களாய், கோழிப்போர்விலை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சிவலோகம், நாகர்கோயில் AWS, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 28, 2024

குமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 15.15, 15. 25,அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.2 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.8 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 13 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16. 2அடி நீரும் இருப்பு உள்ளது.

News May 28, 2024

பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை

image

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் அங்குள்ள விவேகானந்தர் பாறையில் ஜூன் 1ஆம் தேதி வரை 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 28, 2024

இன்று இலவச மருத்துவ முகாம்

image

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் தக்கலை ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் துறை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் 28ம்தேதி (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தில் நடக்கிறது.
இம்முகாமில் இரு தய மருத்துவ சிகிச்சை, பல் சிகிச்சை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் உட்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்குகின்றனர்.

error: Content is protected !!