India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியை வரவேற்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி வந்தார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்திறங்கும் அரசு விருந்தினர் மாளிகை அருகே அவரும், பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் வந்து நின்றனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதிகளில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே சுவாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அய்யா சர்ப்ப வாகனம், மயில்வாகனத்தில் எழுந்தருளினார். திருவிழாவின் 7-ம் நாளான நேற்று அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இன்று முதல் அடுத்து 3 நாட்களுக்கு (மே.30 – ஜூன்.1) மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் தெந்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் நேற்று (மே.29) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முள்ளங்கினாவிளையில் 4 செ.மீட்டரும், பாலமோர், மாம்பழத்துறை, கோழிப்போர்விளை, அணைகெடங்கு, சின்னக்கல்லார், சுருளக்கோடு, குளச்சல், இரணியல், தக்கலை, அடையாமடை, முக்கடல் அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட வந்த நந்தினியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனாவையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு தக்கலைக்கு அழைத்து சென்றுள்ளனர். கன்னியாகுமரியில் இவர்கள் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
தென்கிழக்கு அரபிக் கடலில் மேல் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இன்றிலிருந்து (மே.30) தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரபிக்கடலை ஒட்டிய கன்னியாகுமரி பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் வழுக்கம் பாறையை சேர்ந்தவர் இருதயராஜ்(57). குலசேகரபுரம் பஞ்சாயத்து கவுன்சிலரான இவர் நேற்று(மே 29) நல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது புத்தன் துறை அருண்குமார்(21), கோட்டார் ஜெரின் (24), நன்றிகுழி அஜித் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மது குடிக்க ரூ.500 பறித்து சென்றனர். இது குறித்த புகாரில் சுசீந்திரம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பணியில் இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம், 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். இது குறித்து 1098, 04652 – 229 077 எண்ணிலும் புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.