Kanyakumari

News June 2, 2024

படகு சவாரி டிக்கெட் கவுன்டர் அகற்றம்

image

கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகளை விற்க கவுண்டர் ஒன்றை எந்த வித அனுமதியும் பெறாமல் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் நேற்று குத்தகைதாரர் அமைத்து டிக்கெட் விற்பனை செய்தார். தகவல் அறிந்து திற்பரப்பு பேருராட்சி ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News June 2, 2024

ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்தவர் உயிரிழப்பு 

image

அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் கேரளா மலப்புரத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மலப்புரத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் கீழே இறங்க முயன்றார். ரயில் நகர்ந்தால் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்தார்.

News June 1, 2024

மார்ஷல் நேசமணி நினைவு நாள் அனுசரிப்பு

image

கன்னியாகுமரி: தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News June 1, 2024

குமரி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.0, 16.11, அடி  நீரும், 48 அடி கொள்ளளவு  கொண்ட பேச்சிப்பாறையில் 45.47 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட  பெருஞ்சாணி அணையில் 61 அடி நீரும்,  25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16.1 அடி நீரும் இருப்பு உள்ளது.  

News May 31, 2024

குளச்சல் : மீன் பிடி தடை காலம் இன்றிரவு ஆரம்பம்

image

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, முட்டம், குளச்சல் நீரோடி உட்பட உள்ள கடற்கரை கிராமங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இதன்படி இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.
தடைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப் படகுகள் குளச்சல் துறைமுகம் திரும்பி உள்ளன. அவற்றை மீனவர்கள் துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர்.

News May 31, 2024

ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி பொறியாளர் சஸ்பென்ட்

image

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியம்.  பல்வேறு பணிகளில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியிழப்பு ஏற்படுத்தியதாக ஏற்கனவே தணிக்கை துறை அதிகாரிகள் இவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர். அதற்கு உரிய விளக்கமளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யபட்டார்‌.

News May 31, 2024

கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் சிறப்புகள்!

image

கன்னியாகுமரியில் திருவட்டாறு ஊரில் அமைந்துள்ளது பழைமையான ஆதிகேசவபெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் 76ஆவது தலமான இக்கோயில் 13 மலைநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டுள்ளது. 22 அடி நீளம் கொண்ட மூலவர் சிலை, 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் எனக் கூறப்படுகிறது. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்ற மூன்று நிலைவாயில்கள் உள்ளன.

News May 31, 2024

சூரிய நமஸ்காரம் செய்தார் பிரதமர் மோடி

image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று குமரிக்கு வருகை தந்தார். இன்று 2-வது நாளாக தியானத்தை தொடர்ந்து வரும் அவர் காலை சூரிய உதயத்தின் போது சூரிய பகவானை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்தார். இவரது தியானத்தை முன்னிட்டு உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News May 31, 2024

சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை

image

குமரியில் பிரதமர் தியானத்தில் இருப்பதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு போலீசாரின் சோதனைக்கு பிறகு சுற்றுலாவினர் அனுமதிக்கப்படுவர். காந்தி மண்டபம், கடற்கரை, திரிவேணி சங்கமம் என அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளை திறக்கலாம். சில விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி இல்லை. விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்பட எல்லா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்லலாம் என கன்னியாகுமரி காவல்துறை அறிவித்துள்ளது. 

News May 31, 2024

முன்னாள் மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

image

பிரதமர் மோடியை வரவேற்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி வந்தார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்திறங்கும் அரசு விருந்தினர் மாளிகை அருகே அவரும், பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் வந்து நின்றனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

error: Content is protected !!