India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத்தை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அதிமுக நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராம் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒ.செயலாளர் எஸ்.ஜெஸீம், மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
குமரி மாவட்ட பிரிவு சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இந்த பயிற்சி ஜூன் 26ம் தேதி வரை 6 கட்டங்களாக நடத்தப்படுகிறது. நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம். நீச்சல் குளத்தில் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தனித்தனியே நடத்தப்படுகிறது. என மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று(ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரி மாவட்டம் இரணியல் அருகே வலிய ஏலா பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இறந்தவர் பரசேரியை சார்ந்த வினீஷ்குமார் என்பதும் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட பாஜக அணி/பிரிவு மையக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 1) மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க ஏப்ரல் 5ஆம் தேதி தக்கலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பசலியான் நசரேத் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் ராமன் புதூர் மீன் சந்தை பகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலிஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று இரவு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.