Kanyakumari

News June 7, 2024

திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

image

குமரி: புதிய திருநங்கை அடையாள அட்டை வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்க, ஆதார் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாத திருநங்கைகள், திருநம்பிகள் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

News June 7, 2024

முதல்வரிடம் ஆசி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்

image

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் எம்.பி., விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பட் ஆகியோர் இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றனர். அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

News June 7, 2024

கன்னியாகுமரியில் 10 செ.மீ மழைப்பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொட்டாரம் பகுதியில் 10 செ.மீட்டரும், குருந்தங்கோட்டில் 9 செ.மீட்டரும், நாகர்கோயிலில் 8 செ.மீட்டரும், மயிலாடு, நாகர்கோயில் ARG, கோலச்சல் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், எரனியலில் 6 செ.மீட்டரும், கன்னியாகுமரியில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News June 7, 2024

கன்னியாகுமரி: இரு நாட்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன்.8 & 9) மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News June 7, 2024

ஆட்டோவில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

image

கடையால் சிற்றாற்றின்கரையைச் சேர்ந்தவர் பிபின்(42), முன்னாள் ராணுவ வீரரான இவர் மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்கிறார். கடந்த சில நாட்களாக இவர் முதப்பன்கோட்டில் உள்ள செல்வராஜ்(66) என்பவரின் ஆட்டோவில் இரவு  தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் ஆட்டோவில் இறந்து கிடந்தார். இதுகுறித்து  செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 7, 2024

குமரி: மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

நாகர்கோவில்: தபால்துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்

image

தபால்துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14.6.2024 காலை 11 மணிக்கு நாகர்கோவில் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. தபால் சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில், தெரிவிக்கலாம். தபால் மூலமாக 10ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்
என தபால் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

குமரி வந்த 2,200 டன் ரேசன் அரிசி

image

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,200 டன் ரேசன் அரிசி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 39 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று(ஜூன் 6) கோட்டார் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. பின்னர் வேகன்களில் இருந்து அரிசி மூடைகளை லாரி களில் தொழிலாளர்கள் ஏற்றினர். லாரிகளில் அரிசி மூடைகள் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

News June 7, 2024

குமரி: மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

பணமோசடி புகாருக்கு 1930-ல் அழைக்கலாம் – எஸ்பி

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வதனம் கூறியதாவது, “நிதி இழப்பு மற்றும் பண மோசடிகளால் பாதிக்கப்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே 1930 என்ற இலவச உதவி எண்ணிலும் , www.cybercrime.gov. in என்ற இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவு சைபர் கிரைம் குற்றங்கள் தடுக்கலாம்.
இதனால் பணம் மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.” என்றார்.

error: Content is protected !!