India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிக எடை கொண்ட டாரஸ் லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஜூன்-11) முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. லாரிகளை ஆய்வு செய்து அனுப்பப்படும் என கலெக்டர் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மாவட்ட செயலாளர் அல்காலித் அறிவித்துள்ளார்.
வருமான வரி துறை சார்பில் வருமான வரி செலுத்துவது சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் குமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் அமைந்துள்ள ஒய் ஆர் மஹால் திருமண மண்டபத்தில் ஜூன்-11 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தொழில், வணிக துறையினரிடம் வருமான வரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வருமான வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 59883 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 47676 பேர் இன்று மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 12207 பேர் தேர்வு எழுதவில்லை என கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனா நிலையில், புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து குமரி மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் (இ.கா.ப) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 16.27, 16.37, அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45. 89 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 656 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15. 2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16 அடி நீரும் இருப்பு உள்ளது.
நேற்று (ஜுன்.8) மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என மொத்தம் 84 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜூன்1 ஆம் தேதி முதல் நேற்று வரை 8 நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,421 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 346 மீது வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது
குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே இரயில்வே டிராக் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 10 ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை இருதினங்களாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சாலை மூடப்படுகிறது. ஆகையால் பார்வதிபுரம் சானல்களை வழியாக கணியாங்குளம் , ஆலம்பாறை, பொன்ஜெஸ்லி கல்லூரி, அமிர்தா கல்லூரி மற்றும் இறச்சகுளம் செல்பவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தவும் என இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தட்டான்விளையை சார்ந்த கிறிஸ்டோபர், விஜிலா, பிரான்சிஸ் மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். – இவரது பெற்றோர் இறந்த பிறகு அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அரசால் வழங்கப்படும் நிதி உதவியால் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் தற்போதைய மழையில் இவர்களது வீடு இடிந்துள்ளது.
இவர்களுக்கு உதவுமாறு அப்பகுதியை சார்ந்த மக்கள் இவர்கள் சார்பாக கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42.00 அடியை தாண்டி இன்று மதியம் 2 மணிக்கு 45.59 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாக இருப்பதினால் இன்று மாலை 6.00 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்படுகிறது. எனவே கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றதேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது. எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் கலெக்டர் ஸ்ரீதர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்வார்.
Sorry, no posts matched your criteria.