India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 3 பெரிய உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம்(ஜூன் 10) நடந்தது. இதில் ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 100 வசூலாகி இருந்தது. 5 சவரன் தங்க நகைகளும் காணிக்கையாக கிடைத்தன.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் குப்பையில்லா குமரியாக மாற்றுவது குறித்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் கோல்டன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக நேசமணி நகர் போலீசாருக்கு தகவலை சென்றது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அங்கு 40 வயது பெண்ணும், ஜெகன் ஜோஸ்(39) என்பவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது. ஜெகன் ஜோஸ் கைது செய்யப்பட்டு, பெண் காப்பகம் அனுப்பப்பட்டார். 2 புரோக்கர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 2024-2027ம் ஆண்டுக்கான மாமன்ற தேர்தல் ஜூன் 13,14,15 தேதிகளில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. இந்த தேர்தலை சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ள முன்னாள் மாவட்ட நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் நடத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ள கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று முதல் நாளை இரவு வரை கடல் அலைகள் 2.6 மீட்டர் உயரம் வரை எழும்ப வாய்ப்புள்ளதாகவும், மேலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள், சுற்றுலா பயணிகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் (இ.கா. ப) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் பலத்த காற்று வீசுவதோடு கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. மீனவர்களும், கடலோர மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல கூடாது.
கோடை விடுமுறை சீசனில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். இதில் 4,84,000 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்தனர். ஏப்ரல் மாதம் 1,43,000, மே மாதம் 1,80,300, கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60,000 சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துள்ளனர். நேற்று மட்டும் 7,600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 266 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர். ஶ்ரீதர் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில் வேப்பமூடு அருகே உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இன்று நோட்டு புத்தகம் மற்றும் துணிகளை துணை மேயர் பிரின்சி லதா வழங்கினார் . அப்போது மாணவ, மாணவிகளிடம் பேசுகையில், டாக்டர் அப்துல் கலாம் பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ராணி மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலமாக மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு ஆதார் பதிவு செய்யும் முகாமை துவக்கி வைத்தார்
Sorry, no posts matched your criteria.