Kanyakumari

News June 14, 2024

அடிப்படை தேவையை நிறைவேற்றுவேன்- விளவங்கோடு MLA

image

விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பட் நேற்று(ஜூன் 13) பொதுமக்களின் அடிப்படை தேவையான ரோடு, மின்விளக்கு, குடிநீர், போக்குவரத்து விரைவில் நிவர்த்தி செய்ய அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பணியாக தேனீ வளர்ப்போர் பிரச்னையை தீர்க்க கூட்டுறவு சங்க அலுவலகத்தை பார்வையிட உள்ளேன். செண்பகதரிசில் ரோடு போட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்றும் தெரிவித்தார்.

News June 13, 2024

சூறாவளி: கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு (13 ஜூன் – 17 ஜூன்) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 13, 2024

கைரேகை நிபுணர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், வடசேரி, தக்கலை என மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு நிபுணர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News June 13, 2024

சேவை செய்தோர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

குமரியில் 61 போலீசாருக்கு பதவி உயர்வு

image

தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளில்,  பிரச்னை இன்றி பணியாற்றியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த 61 போலீஸ் ஏட்டுகள், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார். பதவி உயர்வால் 61 போலீஸ் ஏட்டுகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 12, 2024

போலீசாரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி

image

குமரி மாவட்டத்தில் ஜூன்.10ஆம் தேதி அன்று கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக பெண்ணை கடத்த முயன்ற மருமகன் மற்றும் கூட்டாளிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு குமரி மாவட்ட போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு உதவியாக இருந்த கன்னியாகுமரி நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசாரை மாவட்ட எஸ்பி நேரில் பாராட்டினார்.

News June 12, 2024

தனியார் விடுதிகளுக்கு குமரி எஸ்பி அறிவிறுத்தல்

image

குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி அறைகளில் தங்க வருபவர்களின் அடையாள அட்டையை வாங்கி சரி பார்த்த பின்னர், விவரங்களை சேகரித்து அவர்களை விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தனியார் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.

News June 12, 2024

விளவங்கோடு எம்எல்ஏ பதவியேற்பு

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தாரகை கத்பர்ட், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வின்போது, காங். சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, குமரி எம்.பி., விஜய் வசந்தகுமார், அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 12, 2024

கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் குமரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் சற்று நிமமமதி பெருமூச்சு விட்டனர்.

News June 12, 2024

குமரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேகம், போக்குவரத்துக்கு நெரிசல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!