India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் சவர்மா சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட தடகள அசோசியேஷன் மற்றும் மார்த்தாண்டம் கேப் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் அன்ட் சேரிட்டி ஆர்கனைசேஷன் இணைந்து நடத்தும் 21 கி.மீ மாரத்தான் போட்டி நாளை (16.6.24) மார்த்தாண்டத்தில் தொடங்குகிறது. இந்த மாரத்தான் போட்டி நாளை காலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்த மாரத்தான் போட்டியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைக்கிறார்.
கள்ளக்கடல் காரணமாக மீண்டும் குமரி கடலோரபகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மீனவர்களும், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கலெக்டர் ஶ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரைகளில் கடல்சீற்றம் இயல்பை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி கோவளம் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் தரை மட்டத்திலிருந்து 150 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்திற்கு 180 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கலங்கரை விளக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பழைய ரேடார் கருவி மாற்றப்பட்டு தற்போது 25 நாட்டிங்கல் கடல் தொலைவில் வரும் கப்பல்களை ஸ்கேன் செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்த புதிய ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உடன் இருந்தனர்.
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் வந்தே பாரத் ரயிலை விட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் மோடி, முதல்முறையாக தமிழகம் வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் எம் பி நேற்று (ஜூன்-13) சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கிள்ளியூர் MLA ராஜேஷ் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ” அண்ணாமலை கூறுவது போல தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருந்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது ஏன்? மக்கள் மன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே ஒரு கட்சி பலமானதா, பலவீனமானது என்பது தெரியும். பிரதமர் அனைவருக்குமானவர். ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்” என்றார்.
கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் படி வருவாய் கிராமம் வாரியாக விரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பார்வைக்காக தாலுகா ஆபீஸ் ,சார் பதிவாளர் ஆபீஸ் உட்பட முக்கிய ஆபீஸ்களிலும் www.tnreginet. gov. in என்ற இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தக்கலை போலீசார் நேற்று(ஜூன் 13) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புலிப்பனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெண்ணிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது 936 கிராம் குட்கா பொருட்கள் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். புலிப்பனத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் சிந்துகுமாரி (40) என்ற அவர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.