India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதலமைச்சர் கோப்பை குமரி மாவட்டத்திற்கான விளையாட்டு போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதன் சிலம்ப போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி சுதி, மாணவர் பிரவின், ஓட்டபந்தயத்தில் முதல் பரிசு பெற்ற ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து நாகர்கோவில் மேயர் மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 24 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகர மாவட்ட விசிக செயலாளர் அல் காலித் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு 1144 ஹெக்டேர் பரப்பில் தாது மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை எதிர்க்கும் வகையில் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

குமரி மாவட்டம் கோதையாறு பகுதி மலையோர கிராமமாகும். இங்கு 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இன்று காலை 11:30 மணியளவில் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நில அதிர்வு சில வினாடிகள் மட்டுமே இருந்துள்ளது .இதே போல் கோதையாறை ஒட்டியுள்ள கொடுத்தரைமலை பகுதியில் காணியிட மக்கள் வசித்து வரும் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக பயன்படுத்தி, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதை தடுக்க மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களை கண்காணிக்கவும், செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சில நேரங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். அவ்வாறு காணாமல் போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு வசதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்ப மீன்வளத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பார்சல் பிரிவுக்கு வந்த 4 பார்சல்கள் யாரும் எடுக்க வராத நிலையில்அது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் அவை போதைப்பொருள் என்பதை கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த போதைப் பொருள்யாருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போதை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் ரயில்வே போலீசார் நாளை ஒப்படைக்க உள்ளனர்.

குமரி காப்பிக்காடு பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ்-வசந்தி ஆகியோர், தங்களது கன் சுமித்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொச்சி விமான நிலையத்துக்கு நேற்று(செப்.,21) சென்றுள்ளனர். சுமித்தை விமானத்தில் அனுப்பிவிட்டு காரில் சுரேஷ், வசந்தி, உறவினர் பிபின் ஆகியோர் குமரி திரும்பினர். கூடல் இஞ்சிப்பாறை அருகே வந்தபோது நேர்ந்த விபத்தில் வசந்தி, பிபின் உயிரிழந்தனர். சுரேஷ் & காரை ஓட்டி வந்த சிபின் சிகிச்சையில் உள்ளனர்.

குமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா. நேற்று(செப்.20) இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தின் கிள்ளியூர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 1144 ஹெக்டேர் பரப்பில் மோனோசைட், சிர்கான், இல்மனைட் ரூட்டைல், செலிமினேட், கார்னெட் ஆகிய தாது மணல்களை அகழ்வு செய்ய இருப்பதாக இந்திய மணல் ஆலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.