India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நோயாளிகளுக்கான கட்டில் உருவாக்கியதற்காக ஜனாதிபதியிடம் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது பெற்றவர் நாகர்கோவிலை சேர்ந்த சரவணமுத்து. இந்தநிலையில், சுதந்திர தினம் அன்று ஒருநாள் பயன்படுத்தும் தேசியக்கொடிகள் மறுநாள் குப்பை மேடுகளில் கிடைக்கிறது. இதை ஒழிக்க புதிய தொழில்நுட்பத்தை உறுவாக்கியுள்ளதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கொல்லம் – சென்னை இடையே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று (ஜூன் 16) சென்னை நோக்கி காவல்கிணறு அருகே மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென நின்றது. விசாரணையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் 2 வாலிபர்கள் சண்டையிட்டு அபாய சங்கிலியை இழுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிள்ளியூர் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் ஜூன் 19ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் ஜூன் 20 காலை 9 மணி வரை ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குறை மற்றும் கோரிக்கை கேட்கப்படுகிறது.
இனயம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டின்ராஜ் (55) மர்ம மரணத்தை புதுக்கடை போலீசார் தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்தனர். ஆனால் கொலை வழக்காக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இனயம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் அனுமதியின்றி ஜூன் 15ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தி 2 பேருந்தை சிறைபிடித்தனர். நேற்று இது தொடர்பாக 100 பேர் மீது புதுக்கடை
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிரூபர்களிடம் கூறியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது அவர்களின் இயலாமை. எந்த ஒரு சூழலிலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். தேர்தல் ஆணையம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, அது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்கையில் எங்களை காரணமாக கூறுவது அவர்களின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது” என்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண நேற்று இன்றும் விடுமுறை தினமாதலால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் நேற்று மாலையில் சூரிய அஸ்தமத்தை காண்பதற்கு ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது மழை மேகம் காரணமாக சூரிய அஸ்தமனம் தெளிவாக தெரியவில்லை இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
குமரி எம்.பி. விஜய்வசந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில்
, “முஸ்லிம் உறவுகள் அனைவருக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஈகை குணம் இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டுகிறேன். இந்த நாள் தியாகத்தின் மேன்மையையும், ஈதலின் அழகையும் நமக்கு கற்று தருகிறது. அல்லாவின் திவ்ய ஒளி உங்கள் மீது பிரகாசித்து, நன்னெறி பாதையில் வழி நடத்தட்டும். “என குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு திருமணத்திற்கு ஆதரவு கொடுத்ததிற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியதை கண்டித்து திருவட்டாறு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நேற்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில், திருவட்டார் வட்டார குழு செயலாளர் விஸ்வம்பரன், செயலர் ஜூடஸ்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது இரண்டாம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்களின் கல்லூரி திறப்பு தேதி குறித்து அறிவிப்ப வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 19.6.2024 அன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்று கோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் அன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஆட்சியரகம் பகுதியில் உள்ள ரவுண்டானாவைச் சுற்றி, கட்சி தலைவர்கள் வரும்போது கட்சியினர் கொடி தோரணங்களை கட்டி வந்தனர். இதனால் ரவுண்டானாவின் அழகு பாதித்தது. இதை தடுக்கும் வகையில் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள் கொடிகள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.