India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குன்னுவிளை , ஏ.ஆர்.கேம்ப், நடராஜபுரம், இடலாக்குடி, அரசு காலனி ஆகிய பகுதிகளில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் (UHWC) செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ நலவாழ்வு மையங்களில் ஞாயிறு தவிர பிற கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவர் பணியில் இருப்பார்கள். பொது மக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கைகளுக்காக திருநங்கை அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை , வாக்காளர் அடையாள அட்டை. ஆதார் அட்டையில் திருத்தம் செய்து வழங்குவதற்காக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து (ஜூன். 21 ) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை திருநங்கைகள் அடையாள அட்டை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பிரதான சாலைகள் முதல் குறுகலான சாலைகள் வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சி சார்பில் சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதுகுறித்து பேசிய மேயர் மகேஷ், “மாநகராட்சி பகுதி அனைத்து சாலைகளில் உள்ள பள்ளங்களை பழுது பார்க்க ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று (ஜூன் 19) தொடங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும்” என்றார்
குழித்துறை சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையல் பணியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், 18வயதில் இருந்து 37 வயது வரை இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 2 வருடத்திற்கு குறையாமல் சமையல் பணி அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பாளையங்கோட்டை மத்திய சிறை எஸ்.பி அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை அதிகமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக, 15-ம் தேதி 7 ஆயிரம் பேரும், 16ஆம் தேதி 7 ஆயிரத்து 300 பேரும், பக்ரீத் பண்டிகை நாளான நேற்று 6 ஆயிரத்து 300 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் மொத்தம் 20 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர குழு சார்பில் இன்று சி.பி.ஐ.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்த தம்பதிகளுக்கு அடைக்கலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சூறையாடியதையும், நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9:30 முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்யத் துவங்கியது. வடகிழக்கு பருவமழை முடிந்து சில நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், இன்று மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்கிறது. மாநகரின் மிகப்பெரிய அடையாளமாக உருவாகும் இந்த பஸ் நிலையம் 3 அடுக்கு தளம் கொண்டதாக அமைய உள்ளது. அதேபோல் வணிக வளாகமும் கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.