India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாலூரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பூங்காவினை ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 20) ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மை பணியாளர்களிடத்தில் மட்கும் மற்றும் மட்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்குமாறும், பாதுகாப்பான முறையில் பணியாற்றிடவும் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (ஜூன் 20) கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கருங்கல் வட்டார கல்வி அலுவலக வளாகத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்குள்ள திப்பிரமலை அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு பரிமாறினார். மேலும், குழந்தைகளிடத்தில் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
குமரி – திப்ருகர் செல்லும் விவேக் விரைவு ரயில் சேவை தினசரி சேவையாக நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது குமரியில் இருந்து திப்ருகருக்கு வெள்ளி, ஞாயிறு தவிர்த்து ஐந்து நாட்கள் கேரளா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திப்ருகரில் இருந்து குமரிக்கு ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும் போலீசார் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் 4 அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இன்று 2வது நாளாக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது.இந்த ஒத்திகையின் போது, போலீசாரே தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவது, மீனவர்களை சிறைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வரும் 24-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை விளக்கி குமரி போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பணிமனை தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டத்தில் கனிமவளங்களை கேரளாவிற்கு அதிக பாரத்துடன் ஏற்றி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபுரம் சோதனை சாவடியில் போலிஸார் சோதனையில் அதிகபாரம் ஏற்றி வந்த 6 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தில் மாநில அளவிலான 16 வயதிற்குட்பட்ட மாவட்ட அணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதில் 01.01.2008 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், படித்து கொண்டிருப்பதற்கான சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுடன் நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.