India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி காவல்துறை நேற்று(செப்.,26) வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் மோசடி நபர்கள் உங்களது செல்போனிற்கு SBI Rewards link & APK File-ஐ அனுப்பி அதை இன்ஸ்டால் செய்யவைப்பர். பின்னர் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் வாட்ஸ்-ஆப் செய்யப்படும். எனவே பொதுமக்கள் இது போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்கும்படி அதில் அறிவுறுத்தியுள்ளனர்.

நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் சுசீந்திரம், கோட்டார், கன்னியாகுமரி துணை அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மகாளய அமாவாசை மற்றும் தீபாவளியை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று (செப் 26) தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் முழுமைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் முழுமைத் திட்டம் தொடர்பாக ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் அதனை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாகர்கோவில் உள்ளூர் திட்டக் குழுமம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப்.26) முதல் அக்.1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள்(செப்.28) அன்று குமரி உள்ளிட்ட 19 மாவட்டங்கள், செப்.29 அன்று குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பத்மநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றாம் தேதி கடற்கரை கிராமங்களில் இருந்து மணல் ஆலைக்கு தாது மணல் எடுப்பு சம்பந்தமாக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் பத்மநாதபுரம் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி விழாவிற்காக சாமி விக்ரகங்கள் ஊர்வலம் செல்வதை அடுத்து அன்று நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பட் இன்று தாது மணல் பிரச்சனையை காங்கிரஸ் தூண்டி விடுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் கூறி இருப்பது எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. தாது மணல் எடுப்பதால் புற்றுநோய் பரவுகிறது என்ற கருத்து உள்ளது. அது இல்லை என்று ஆதாரப்பூர்வமாக எந்த பதிலும் IREL தரப்பில் தெரிவிக்கவில்லை. மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் அதனால் நாங்களும் எதிர்க்கிறோம் என்றார்.

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்க 2012 இல் மத்திய அரசு கொண்டு வந்த போக்சோ சட்டப்படி தண்டனை நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். குமரியில் கடந்த 9 மாதங்களில் 78 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயது நிரம்பியதும் புகாரை திரும்பபெறுவதால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்புவதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறினர்.

கன்னியாகுமரியில் இருந்து அமிர்தசரசுக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தென் இந்தியாவின் எந்த ஒரு நகரங்களில் இருந்தும் அமிர்தசரசுக்கு நேரடி ரயில் சேவை இல்லை என்பதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து சம்மந்தர் அமிர்தசரசுக்கு ரயில் இயக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மீனவ குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் அரசு துறைகள் சார்பில் தங்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இந்த மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

பழைய செல்போன்களை விலைக்கு வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அவை திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக இருக்க வாய்ப்பு உள்ளது என குமரி போலீஸ் எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது,”99% சைபர் குற்றங்கள் செல்போன்களால் ஏற்படுகிறது. செல்போன் திருட்டு புகார் அதிகம் வருகிறது. செல்போன் கீழே கிடந்துஎடுத்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.