India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
குமரி ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதற்கான சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வீடு வழங்கிட கோரி உடனடியாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம்(இ. கா. ப) இன்று(ஜூன் 25) வெளியிட்டுள்ள தகவலில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்களை கண்டால் அதனை வாகன எண்ணுடன் போட்டோ அல்லது வீடியோ எடுத்து 70103-63173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துமனை முதல்வர் கிளாரன்ஸ் டேவிட்டிடம், தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நோயாளி பிரிவில் சிகிச்சைக்கு வந்த ஒருவர் புகார் அளித்தார். விசாரணையை தொடர்ந்து, மருத்துவ அதிகாரி சுப்ரஜாவை முதல்வர் கிளாரன்ஸ் டேவி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக வேறு சில மருத்துவர்களும் சிக்கலாம் என கூறப்படுகிறது.
குமரி மாவட்டம் நீடோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடலில் 2.6 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு கடல் பேரலை எழ வாய்ப்புள்ளதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலை வரும் 27ஆம் தேதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மீனவ கிராமங்களில் வசிப்பவர்களும், மீன்பிடிக்க செல்பவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிள்ளியூர் வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் கீழபாலூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கோபால் தலைமை தாங்கி இயற்கை விவசாயத்தின் அவசியம் பெற்றியும், நன்மைகள் பற்றியும் விளக்கிப் பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் நவனிதா விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றியும் மானிய விலையில் வழங்கப்படும் செடிகள் பற்றியும் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் இன்று (ஜூன் 24) நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஈம சடங்கு உதவித்தொகை ரூ.14.25 லட்சத்தில் 25 பேருக்கும், செயற்கை அவயம் ரூ.2.81 லட்சத்தில் 37 பேருக்கும்,
முடநீக்கு உபகரணம் ரூ1.90 லட்சத்தில் 12 பேருக்கும் என மொத்தம் 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் தொடர்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் எச்சரித்தார். பைக் சாகசம் செய்பவர் வாகன எண்ணுடன் எஸ்பி அலுவலக எண் 04652 220167 அல்லது 100 ஐ அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.
மாவட்டஆட்சியர் ஸ்ரீதர் கூறியதாவது, ” அனுமதியின்றி மெத்தனால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொது மக்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண் 10581, காவல்துறை வாட்ஸ் அப் எண் 81229 30279,7010363173 எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.” என்றார்.
Sorry, no posts matched your criteria.