India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி சிதறால் பகுதியை சேர்ந்த சுரேஷ்(45), புன்னை நகர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறார். இவர், கொல்லங்கோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி தினேஷ் குமாரிடம்(62), அவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3,75,000 பெற்றுள்ளார். ஆனால் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் தராமல் மோசடி செய்ததாக புகார் அளித்ததன்பேரில் நேசமணி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு பிரிவுகளில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைப்பெற்று வருகிறது. ஏ, ஏ ப்ளஸ், பி, சி என நான்கு பிரிவுகளில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ ப்ளசில் 25 ரவுடிகளும் , ஏ பிரிவில் 120 ரவுடிகளும் , பி. சி பிரிவில் 1207 ரவுடிகளும் உள்ளனர். இவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
குமரியிலிருந்து திப்ரூகர் செல்லும் விவேக் விரைவு வண்டி நாகர்கோவிலில் தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜினை பெட்டியில் இணைக்கும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது. ரயிலில் அச்சமயம் பயணிகள் யாரும் இல்லை. பராமரிப்புக்காக எடுத்துச் செல்லும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது – திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம்
குமரி மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அரசின் ‘கண் லென்ஸ்’ பொருத்தும் முகாம் நடைபெற உள்ளது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் என 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஜூலை 11, 12, 13, 25, 26, 29 தேதிகளில் பல்வேறு இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் தேர்வு செய்யப்படும் நோயாளிகளை அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இலவசமாக கண் லென்ஸ் பொருத்தப்படும் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட துணிச்சல்மிக்க பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு குமரி மாவட்டத்தில் துணிச்சல், தைரியமாக செயல்பட்ட பெண்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று(ஜூலை 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், குமரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி (மேற்கு) மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்தவர் பிரச்சார பேச்சாளர் குமரி M S தாஸ். இவர் நேற்று கருங்கல் திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை அமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். இதில், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
குமரி மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் என மொத்தம் 609 குளங்களிலிருந்து விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி அனுமதி பெற்று கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர். ஶ்ரீதர் தெரிவித்துள்ளார்.
குமரி ஜீரோ பாயிண்ட்டில் உள்ள 148 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது, “குமரி ஜீரோ பாயிண்ட்டில் ஏன் தேசியக்கொடி பறக்கவிடப்படுவதில்லை? எப்போது அது சரி செய்யப்படும்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து குமரி ஜீரோ பாயிண்டில் தேசியக்கொடி பறப்பதை உறுதிசெய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.