Kanyakumari

News May 28, 2024

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு அதிகாலை 4.10 மணிக்கு செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 2,9,16,23,30 தேதி இந்த ரயில் இயங்கும். இதே போல மறு மார்க்கத்தில் 3, 10, 17, 24, ஜூலை 1 ஆகிய தேதியில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News May 28, 2024

கூண்டில் சிக்கிய மரநாய்

image

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் தற்போது ஒரு சில பழைமையான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக மரநாய்கள் தொல்லை கொடுத்து வந்தன. இதனால் ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி வேளிமலை வனபாதுகாப்பு அதிகாரிகள் மரநாய்களை பிடிக்க நீதிமன்றவளாகத்தில் கூண்டு வைத்தனர். நேற்று சிக்கிய மரநாயை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.

News May 27, 2024

தொழிலாளிகள் 4 பேருக்கு கத்திகுத்து

image

புத்தேரி – பார்வதிபுரம் பகுதியில் 4 வழி சாலை பணி நடந்து வருகிறது. வேலையாட்கள் அருகில் கூடாரத்தில் தங்கி இருந்தனர். நேற்று மாலை கூடாரத்தில் தென்காசி ராஜசேகர் (34) இருந்த போது நாகர்கோவில் டேவிட் ராஜ் (28) உட்பட 6 பேர் வந்து அவரிடம் தீப்பெட்டி கேட்டனர். இதில் தகராறு முற்றி ராஜசேகரை அவர்கள் கத்தியால் குத்தினர். தடுக்க வந்த 3 பேரையும் குத்தினர். வடசேரி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 27, 2024

குமரி: மாணவர்களுக்கு உதவி தொகை

image

குமரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் 2024-25ம் கல்வியாண்டு முனைவர் பட்டம் (Ph.D) /முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை (National Overseas Scholarship Scheme NOS)) வெளிநாடுகளில் தொடர கல்வி உதவித்தொகை பழங்குடியின நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இதற்கு <>-1<<>>  இணையத்தில் மே.31-க்குள் விண்ணப்பிக்கும்படி  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

குமரி முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுகின்ற முக்கடல் அணை கடும் வெயில் காரணமாக 1 அடிக்கும் கீழாக நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையின் காரணமாக இன்று (மே.27) காலை நிலவரப்படி முக்கடல் அணை 12 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிகிறது.

News May 27, 2024

குமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 14.99. 15.09,அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44.97 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.25அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 12.4 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16. 2அடி நீரும் இருப்பு உள்ளது.

News May 27, 2024

டாஸ்மாக் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

image

தெங்கம்புதூர் பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (37) (டாஸ்மாக் ஊழியர்). நேற்று முன்தினம் இவரது வீட்டு முன் சந்தேகப்படும் வகையில் நின்றவர்களிடம், ஏன் இங்கு நிற்கிறீர்கள்? என சரவணன் கேட்டதும் மூவரும் அவரை தாக்கி அரிவாளால் வெட்டினர். காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரி கிருஷ்ணன், ஹரீஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

News May 27, 2024

ஞாயிற்று கிழமையும் ரேஷன் பொருள் சப்ளை

image

உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையும் குமரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. பொதுமக்கள் பலரும், ரேஷன் பொருட்களை வாங்கி சென்றனர். பல கடைகளில் பருப்பு, பாமாயில் இருப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். அவை இருப்பு வைக்க வேண்டும் என்றனர். 

News May 26, 2024

பெண்கள் புகார் மீது ரகசிய விசாரணை: எஸ்.பி

image

குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, இளம்பெண்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பரப்பபோவதாக பணம் கேட்டு மிரட்டும் புகார்கள் குறித்து பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப் படும். இது பற்றி ரகசியமாக விசாரணை நடத்தப்படும் என்றார். 

News May 26, 2024

போதை பொருள் விற்பனை பற்றி தகவல் தெரிவிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது ரமணா படத்தில் வரும் காட்சியுடன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மீம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கஞ்சா குட்கா போதை பொருட்கள் விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் 70103-63173 என்ற எண்ணுக்கு காலை 7 முதல் மாலை 6 மணி வரை தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

error: Content is protected !!