India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் சுசீந்திரம் வழுக்கம் பாறையை சேர்ந்தவர் இருதயராஜ்(57). குலசேகரபுரம் பஞ்சாயத்து கவுன்சிலரான இவர் நேற்று(மே 29) நல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது புத்தன் துறை அருண்குமார்(21), கோட்டார் ஜெரின் (24), நன்றிகுழி அஜித் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மது குடிக்க ரூ.500 பறித்து சென்றனர். இது குறித்த புகாரில் சுசீந்திரம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பணியில் இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம், 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். இது குறித்து 1098, 04652 – 229 077 எண்ணிலும் புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நாளை (30)மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று (29) கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர் .
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில்
புதுமைப்பெண் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1,000/- அவர்களின் வங்கி
கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் 161 கல்லூரிகளிலிருந்து 3693 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி தியானம் மேற்கொள்வதற்காக நாளை கன்னியாகுமரி வருகிறார். தொடர்ந்து மே.30, 31, ஜூன்.1 ஆகிய தேதிகளில் குமரியில் தங்குகிறார் இதனை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யும் 3 நாட்களும் டிரோன்கள் பறக்க குமரி மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.
பள்ளிகல்வி இயக்குநர் குமரி கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “பள்ளி திறந்த பின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடக்கும் காலை வணக்க கூட்டத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். செவ்வாய் தோறும் காலை கூட்டத்தில் 6 -12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு தகவல்கள் சார்ந்த பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதை இடம் பெற வேண்டும்” என குறிபிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள வட்டக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோட்டையாகும். இது திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கட்டப்பட்டது. 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட, இக்கோட்டையினுள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று லேசான மழை பெய்தது. மேலும், கடலோரப் பகுதியில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் நேற்று (மே.27) பெய்த மழைப்பொழிவு விவரம்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், சுருளக்கோடு, திற்பரப்பு, பாலமோர், புத்தன் அணை, முள்ளங்கினவிளை, காளியல் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், சித்தாறு-I, குழித்துறை, துக்களாய், கோழிப்போர்விலை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சிவலோகம், நாகர்கோயில் AWS, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 15.15, 15. 25,அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.2 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.8 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 13 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16. 2அடி நீரும் இருப்பு உள்ளது.
Sorry, no posts matched your criteria.