India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 22ஆம் தேதி காலை 9 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். எனவே குமரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்து பயன் பெறுமாறு ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் இந்து அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர ஆணையராக இருந்த அழகுமீனா குமரி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மரியாதை நிமித்தமாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சென்னையில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அமரர் வேலாயுதன் வில்லுக்குறி அருகே கீழகருப்புகோட்டில் நிறுவப்பட்டுள்ள நினைவு மணிமண்டபம் திறப்பு விழா ஜூலை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். மணிமண்டபம் திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு குமரி மாவட்ட பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வரும், பி.என்.ஸ்ரீதர் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு, குமரி மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 16) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. குளச்சல், முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. இதனையடுத்து, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 6,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்ட பாஜக அணி மற்றும் பிரிவு மையக்குழு கூட்டம் நாகர்கோவில் பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. இதில், கோட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணன் வழி நடத்தினர். கூட்டத்தில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க நாளை (ஜூலை 18) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.