Kanyakumari

News July 21, 2024

ஆசிரியர் திலகம் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

குமரி அறிவியல் பேரவை சார்பில் வருடம் தோறும் ஆசிரியர் திலகம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-24 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 9942758333 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது mullanchery@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டது.

News July 21, 2024

குமரி மாவட்டத்திற்கு இரவில் மழை

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News July 21, 2024

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி பொறியாளர் அலுவலகத்தில் சாம் செல்வராஜ் என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஒப்பந்ததாரர்களிடம் சாம் செல்வராஜ் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்பேரில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாம் செல்வராஜ் லஞ்சம் வாங்குவதை கண்ட அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்த 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

News July 21, 2024

குமரி மாவட்ட காவல்துறை புதிய அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பைக் ஓட்டுவதை தடுக்கும் விதத்தில் சிறுவர்கள் பைக்குடன் பெட்ரோல் நிலையத்திற்கு வந்தால் பெட்ரோல் கொடுக்க கூடாது என குமரி மாவட்ட காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் பைக் ஓட்டும்போது சாகசங்கள் செய்வது, அதிவேகமாக ஓட்டுவது ஆகிய செயல்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பெட்ரோல் நிலையங்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

News July 20, 2024

குமரி ஆட்சியர் நாளை பொறுப்பேற்பு

image

கன்னியாகுமரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அழகுமீனா நாளை (ஜூலை 21) காலை 9.15 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இவர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்தவர் ஆவார். நாளை நடைபெற உள்ள ஆட்சியர் பொறுப்பேற்பு நிகழ்வின்போது பல்வேறு துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர். தற்போது ஆட்சியராக உள்ள ஸ்ரீதர் அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

News July 20, 2024

“தமிழகத்தைவிட வெளி மாநிலங்களில் பஸ் கட்டணம் அதிகம்”

image

கலைஞர் ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 14 ஆயிரம் பேருந்துகள் தான் வாங்கப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். குமரி மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை இன்று கொடியசைத்து துவக்கி வைத்து பேசிய அவர், தமிழகத்தைவிட வெளி மாநிலங்களில் பஸ் கட்டணம் அதிகமாக வசூலிக்கின்றனர் என்றும் பேசினார்.

News July 20, 2024

கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

News July 20, 2024

2026 தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்: அமைச்சர்

image

அதிமுக ஒருங்கிணைந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நேற்று இரணியலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக போராடிய இயக்கம் திமுக. முதல்வர் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை வைத்து சொல்கிறோம். மக்கள் திமுக பக்கம் உள்ளனர் எனக் கூறினார்.

News July 19, 2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரவு மழை

image

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

குமரியில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!