India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன்.8 & 9) மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடையால் சிற்றாற்றின்கரையைச் சேர்ந்தவர் பிபின்(42), முன்னாள் ராணுவ வீரரான இவர் மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்கிறார். கடந்த சில நாட்களாக இவர் முதப்பன்கோட்டில் உள்ள செல்வராஜ்(66) என்பவரின் ஆட்டோவில் இரவு தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் ஆட்டோவில் இறந்து கிடந்தார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தபால்துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14.6.2024 காலை 11 மணிக்கு நாகர்கோவில் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. தபால் சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில், தெரிவிக்கலாம். தபால் மூலமாக 10ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்
என தபால் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,200 டன் ரேசன் அரிசி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 39 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று(ஜூன் 6) கோட்டார் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. பின்னர் வேகன்களில் இருந்து அரிசி மூடைகளை லாரி களில் தொழிலாளர்கள் ஏற்றினர். லாரிகளில் அரிசி மூடைகள் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வதனம் கூறியதாவது, “நிதி இழப்பு மற்றும் பண மோசடிகளால் பாதிக்கப்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே 1930 என்ற இலவச உதவி எண்ணிலும் , www.cybercrime.gov. in என்ற இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவு சைபர் கிரைம் குற்றங்கள் தடுக்கலாம்.
இதனால் பணம் மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.” என்றார்.
குமரி மாவட்ட குவாரிகளில், உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டு பிடிக்கப்பட்டால், குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிம வள லாரிகள் செல்வதை உடனே தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11 அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மா.செ அல்காலித் அறிவித்துள்ளார்.
குமரி, சித்திரங்கோட்டில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இன்று ஊழியர்கள் குவாரி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. மதியம் சுமார் ஒரு மணி அளவில் மின்னல் தாக்கி 3 ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் குலசேகரம், தக்கலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கொற்றிகோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.