Kanyakumari

News June 9, 2024

குமரி மாவட்ட அணைகள் நிலவரம்

image

 கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.27, 16.37, அடி  நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45. 89 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 656 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15. 2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16 அடி நீரும் இருப்பு உள்ளது.  

News June 9, 2024

போக்குவரத்து விதி மீறல்: 1421 பேர் மீது வழக்கு

image

நேற்று (ஜுன்.8) மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என மொத்தம் 84 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜூன்1 ஆம் தேதி முதல் நேற்று வரை 8 நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,421 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 346 மீது வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது

News June 8, 2024

ரயில்வே டிராக் பணிக்காக சாலை மூடப்படுகிறது

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே இரயில்வே டிராக் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 10 ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை இருதினங்களாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சாலை மூடப்படுகிறது. ஆகையால் பார்வதிபுரம் சானல்களை வழியாக கணியாங்குளம் , ஆலம்பாறை, பொன்ஜெஸ்லி கல்லூரி, அமிர்தா கல்லூரி மற்றும் இறச்சகுளம் செல்பவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தவும் என இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

News June 8, 2024

தொடர் மழையால் இடிந்த வீடு – உதவிக்காக காத்திருக்கும் மூவர்

image

தட்டான்விளையை சார்ந்த கிறிஸ்டோபர், விஜிலா, பிரான்சிஸ் மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். – இவரது பெற்றோர் இறந்த பிறகு அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அரசால் வழங்கப்படும் நிதி உதவியால் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் தற்போதைய மழையில் இவர்களது வீடு இடிந்துள்ளது.
இவர்களுக்கு உதவுமாறு அப்பகுதியை சார்ந்த மக்கள் இவர்கள் சார்பாக கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

News June 8, 2024

பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு

image

பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42.00 அடியை தாண்டி இன்று மதியம் 2 மணிக்கு 45.59 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாக இருப்பதினால் இன்று மாலை 6.00 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்படுகிறது. எனவே கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 8, 2024

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றதேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது. எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் கலெக்டர் ஸ்ரீதர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்வார்.

News June 8, 2024

குமரி மாவட்டத்திற்கு மழை

image

நெல்லை, தென்காசி, குமரியில் மாவட்டங்களில் இன்று (ஜூன் 8) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை குமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

News June 7, 2024

திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

image

குமரி: புதிய திருநங்கை அடையாள அட்டை வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்க, ஆதார் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாத திருநங்கைகள், திருநம்பிகள் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

News June 7, 2024

முதல்வரிடம் ஆசி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்

image

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் எம்.பி., விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பட் ஆகியோர் இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றனர். அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

News June 7, 2024

கன்னியாகுமரியில் 10 செ.மீ மழைப்பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொட்டாரம் பகுதியில் 10 செ.மீட்டரும், குருந்தங்கோட்டில் 9 செ.மீட்டரும், நாகர்கோயிலில் 8 செ.மீட்டரும், மயிலாடு, நாகர்கோயில் ARG, கோலச்சல் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், எரனியலில் 6 செ.மீட்டரும், கன்னியாகுமரியில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

error: Content is protected !!