India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் ஜுலை 30 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஆளில்லா வீடுகளில் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தனிப்படை போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்யும் வகையில் இரவு நேர ரோந்து பணி 10 – 2 மற்றும் அதிகாலை 2 – 6 மணி வரை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் தொலை தொடர்பு சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆட்கள் தேவைபடுகிறது. இதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜுலை.26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என நாகர்கோவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 377வது விதியின் கீழ் இன்று சமர்ப்பித்த கோரிக்கையில் விஜய் வசந்த் எம்.பி குறிப்பிட்டிருப்பதாவது, “தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே முதல் பெய்து வரும் மழை காரணமாக குமரி மாவட்டத்திரப்பா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலையில் பெய்யும் மழையானது, ரப்பா் பால்வடிவதை முடக்கி வருகிறது. ரப்பா் விலை உயா்ந்தபோதும், அதன் பலனை விவசாயிகள் அடைய முடியாத வகையில் உற்பத்தி முடங்கியுள்ளது.
கோவை பி.ஆா்.எஸ். பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கோவை ரைபிள் சங்கம் சாா்பில் நடைபெற்ற தூப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,650 வீரா் – வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இதில், கன்னியாகுமரி அமிா்தா வித்யாலயம் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவியான ஈச்சன்விளையை சோ்ந்த விஷ்மிதா என்பவா் 16 வயதுக்குள்பட்ட 10 மற்றும் 50 மீட்டா் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்று 4 தங்கப் பதக்கம் வென்றார்.
கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், அதிமுக தக்கலை ஒன்றிய செயலாளருமான மெர்லியண்ட் தாஸ் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிதாக ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் அழகுமீனாவை நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி கோர்ட் ரோடு வாகன நிறுத்துமிடத்தில் பொதுக்கழிப்பறை கட்டுவதற்கான இடம், கோர்ட் சாலை ஆகிய இடங்கள் மற்றும் பூங்காவில் பழுதடைந்து காணப்படும் விளையாட்டு உபகரணங்களை இன்று மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அவற்றை சீரமைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். மாநகர நல அலுவலர் ராம்குமார் செல்வன், திட்டமிடல் அலுவலர் வேலாயுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.
குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். இந்த மூன்று மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு, ஆடி பூரம் ஆகியவை அம்மனுக்கு உகந்த நாட்களாகும். அந்த வகையில் நேற்று(ஜூலை 23) ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் குமரி எம்எல்ஏ N.தளவாய் சுந்தரம் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தார். பின்னர் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.