Kanyakumari

News April 4, 2025

குளத்தில் மூழ்கிய கொத்தனார் உயிரிழப்பு

image

தக்கலை கஞ்சிகுழியை சேர்ந்த ஜெயக்குமார் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்ப்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2025

நடிகர் மனோஜ் வீட்டில் அஞ்சலி செலுத்திய பொன் ராதாகிருஷ்ணன்

image

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று (ஏப்.3) இயக்குநர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் மரணம் அடைந்ததையடுத்து சென்னையில் உள்ள அன்னாரின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாரதிராஜாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

News April 4, 2025

சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLA!

image

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சியில் மேஜர் ஸ்ரீ விக்கிர ராமர் என்ற கோயில் உள்ளது இது சுமார் 1,200 வருட பழமையானது. அந்த கோயிலில் அன்னதான மண்டபம் கட்டித்தர இயலுமா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மக்களுக்கு பயன்படுமானால் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

News April 3, 2025

தோஷம் நீக்கி குழந்தை வரம் அருளும் நாகராஜர்

image

நாகர்கோவில் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆலயம் நாகராஜா கோயில். இங்கு, நாகராஜரை வணங்குவோர் நோய், நொடியின்றி நலம் பெற்று வாழ்வார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் என்றும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத தோல் தொடர்பான நோய் நீங்கிவிடுகிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நாக தோஷம் உள்ளவர்கள் மற்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க

News April 3, 2025

குமரி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட சர்விஸ் அட்வைசர் , டெலிகாலர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு கிளிக் செய்து 04-06-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

குமரி : மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News April 3, 2025

குமரி : ஏப்ரல் 15 முதல் கடலுக்கு செல்ல தடை

image

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசு சார்பில் மீனவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

குமரியில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்

image

குமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்,மீன் இனப்பெருக்க காலத்தை ஒட்டி வரும் 15ஆம் தேதி முதல் ஜூன்.15ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை.

News April 2, 2025

Grindr செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

image

குமரி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; Grindr செயலி மூலம் ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது போன்ற செயலியை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்ப்பது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.

News April 2, 2025

குமரியில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் வரை மானியம்

image

குமரி மாவட்டத்தில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் புதிய கோழிப் பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைக்கலாம். தகுதி உடையவர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!