Kanyakumari

News June 29, 2024

தற்காலிக ஆசிரியர் பணி; கலெக்டர் அறிவிப்பு

image

குமரி மாவட்டம் கலிங்கராஜபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் முதுகலை பட்டதாரி தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வி தகுதி உடையவர்கள் ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

News June 29, 2024

குமரி மாவட்டத்தில் களரி பயிற்சி & ஆராய்ச்சி மையம்!

image

தமிழ்நாட்டின் தொன்மை மிக்க பாரம்பரிய தற்காப்பு கலையான களரி கலையை மீட்டெடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் களரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டபேரவை கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 27, 2024

குரூப் தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

2327 பணிக் காலியிடங்களுக்கான TNPSC Group II, II A தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வைத்து நடக்கிறது. வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 5ம்தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும். 100 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில், சானல்களில் தண்ணீர் வரத்து, குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியே செல்வோர் குடை, ரெயின்கோட் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 27, 2024

கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு

image

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையினை காண்பதற்கு அமைக்கப்பட்டு வரும் ஒலி மற்றும் ஒளி காட்சி கூடப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 26, 2024

குமரி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

குமரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

News June 25, 2024

கலைஞரின் கனவு இல்லம் – விண்ணப்பிக்க அழைப்பு

image

குமரி ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதற்கான சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வீடு வழங்கிட கோரி உடனடியாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!