Kanyakumari

News July 2, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் சேஷாத்ரி, அபிஷேக்குமார் பன்சால் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன், வேட்பாளர்களின் இறுதி தேர்தல் செலவினம் கணக்கு தாக்கல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் செலவின கணக்கு குழு தலைவர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News July 1, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News July 1, 2024

நடமாடும் உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு வாகனம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இன்று (ஜூலை .1) நடமாடும் உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மேலும் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆட்சியர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 1, 2024

இணையதளம் மூலம் பட்டா பெறலாம்

image

நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் நிலவரித் திட்டங்களின் படி வழங்கப்பட்ட பட்டாக்கள் சரிபார்க்கும் பணிகள் முடிந்து அவை இணையவழிப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு (நத்தம்) பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்கள் தங்களது பட்டாவினை “eservices.tn.gov.in”என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் எனக் கூறியுள்ளார்.

News July 1, 2024

மாவட்ட ஆட்சியரை சந்தித்த எம்.எல்.ஏ

image

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாரகை கத்பர்ட் இன்று (ஜூலை.1) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து அளித்து சந்தித்தார். மேலும் ஆட்சியரிடம் தொகுதிக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.

News July 1, 2024

குமரி காங்கிரஸ் நிர்வாகிக்கு வாழ்த்து

image

குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக குழித்துறை பகுதியை சேர்ந்த ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள அவரை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பிர் ராஜேஷ்குமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

News July 1, 2024

குமரி இந்து முன்னணி துணை தலைவர் நியமனம்

image

காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாட்களாக இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவராக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்து சமுதாய போராளி ஜெயராம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பணி சிறக்க குமரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News June 30, 2024

“போலீசார் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” – எஸ்.பி

image

நேற்று குமரி மாவட்ட போலீசாரின் குறை கேட்டறியும் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. அப்போது மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம் பேசும் போது, “ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புடன் செயல் பட வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும்போதும், முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணியில் ஈடுபடும் போதும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

News June 29, 2024

நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை துவங்குவது எப்போது?

image

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 20ஆம் தேதி பிரதமர் துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. அதன்படி ரெயில் ஓடுவதற்கு 8 மணி நேரம் 50 நிமிட பயண நேரம் எடுத்துக் கொண்டது. குறுகிய நேரத்தில் ரெயில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இன்னும் வந்தே பாரத் ரெயில் சேவை துவங்காததால் ரயில் பயணிகளை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

News June 29, 2024

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

image

ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி ஜூலை 9ஆம் தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறுகிறது. மார்ஷல் நேசமணி, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய தலைப்பில் பேச்சுபோட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!