Kanyakumari

News July 4, 2024

குமரியில் இதுவரை 33 பேர் குண்டர் சட்டத்தில்  கைது

image

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி, அடிதடி, திருட்டு வழக்குகளில் கைதாகி உள்ள செல்வன் ஜெபராஜ், பிரவீன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து, இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன்படி, குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இந்த ஆண்டில் மொத்தம் 33 பேர் கைதாகி உள்ளனர்.  

News July 4, 2024

ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள்: குமரி கலெக்டர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் ரூ.75.63 கோடி மதிப்பீட்டில், பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின்கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.17,500-க்கு 5 ஆடுகள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள் நிலமற்ற, ஏழ்மை நிலையில் உள்ள விதவை, கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களாக இருக்க வேண்டும். 60 வயதுக்குட்பட்டோர் நாகர்கோவில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என குமரி ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

நாகர்கோவில்-சென்னைக்கு 4 நாள் வந்தே பாரத் ரயில்

image

நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயிலை, வாரம் 4 முறை இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும். சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50-க்கு நாகர்கோவில் வந்துசேரும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20-க்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11 மணிக்கு சென்று சேரும்.

News July 4, 2024

குமரிக்கு ரூ.21 கோடி தேவை: அமைச்சரிடம் எம்பி கோரிக்கை

image

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் டெல்லியில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நேரில் அளித்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: “கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலத்திலும் ரோடு சேதமாகி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இந்த சாலைகளை செப்பனிட ரூ.21
கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 3, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று(ஜூலை 03) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News July 3, 2024

குமரி: புகார் அளிக்க எண் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவுப் பொருட்கள் பரிசோதனை விழிப்புணர்வு வாகனத்தை நேற்று (ஜூலை 2) ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்து ஆய்வுக் கூடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 9444042322 என்ற whatsapp எண் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்தார்.

News July 3, 2024

எஸ்.டி.பி.ஐ கட்சி செயற்குழு கூட்டம்

image

குமரி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவிதாங்கோடு மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைவர் சுல்பிக்கர் அலி மற்றும் மண்டல செயலாளர் நெல்லை கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News July 2, 2024

குமரி: 6 தாலுகாக்களில் இணையவழி பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை இணைய வழி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும், உட்பிரிவுடன் கூடிய இணைய வழி பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த நிலவுடமைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 381 மனுக்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் முகாமில் கல்வி உதவித்தொகை,
பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என 381 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

மாவட்ட வருவாய்துறை அலுவலருடன் சந்திப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் பாலசுப்பிரமணியத்தை நேற்று (ஜூலை 1) விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தாரகை கத்பர்ட் ஏற்கனவே நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!