Kanyakumari

News July 10, 2024

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட துணிச்சல்மிக்க பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு குமரி மாவட்டத்தில் துணிச்சல், தைரியமாக செயல்பட்ட பெண்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

குமரி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று(ஜூலை 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2024

குமரி: காலை 10 மணி வரை மழை

image

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், குமரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2024

திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்

image

கன்னியாகுமரி (மேற்கு) மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்தவர் பிரச்சார பேச்சாளர் குமரி M S தாஸ். இவர் நேற்று கருங்கல் திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை அமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். இதில், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News July 6, 2024

 மண் எடுக்க அனுமதி; ஆட்சியர் அறிவிப்பு 

image

குமரி மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் என மொத்தம் 609 குளங்களிலிருந்து விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி அனுமதி பெற்று கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர். ஶ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

148 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்படுமா?

image

குமரி ஜீரோ பாயிண்ட்டில் உள்ள 148 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது, “குமரி ஜீரோ பாயிண்ட்டில் ஏன் தேசியக்கொடி பறக்கவிடப்படுவதில்லை? எப்போது அது சரி செய்யப்படும்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து குமரி ஜீரோ பாயிண்டில் தேசியக்கொடி பறப்பதை உறுதிசெய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

News July 5, 2024

குமரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி கேள்வி

image

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் உள்ள 148 உயரமுள்ள தேசிய கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஏன் தேசியக் கொடியை அங்கு இன்னும் பறக்க விடவில்லை என நீதிபதி இன்று (ஜூலை 5) நடைபெற்ற விசாரணையின் போது கேள்வி எழுப்பினார். இதற்கு குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 4, 2024

குமரி எம்.பி.யை வரவேற்ற மாநகராட்சி மேயர்

image

கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம்.பி. முதல் முறையாக இன்று(ஜூலை 04) நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தோர் பங்கேற்றனர்.

News July 4, 2024

குமரி எம்.பி.யின் கோரிக்கை

image

பாராளுமன்றத்தில் 377 விதியின் கீழ் நேற்று (ஜூலை 4) நடந்த விவாதத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சமர்பித்தவை; நான்கு வழிச் சாலையை டவுன் ரயில் நிலையத்துடன் இணைக்க இணைப்பு சாலை வேண்டும், திருவனந்தபுரம் – நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமர்பித்தார். 

News July 4, 2024

நாகர்கோவில்: நாளைய மின்தடை 

image

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1200 மின்மாற்றிகளில் நாளை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள்சந்தை, தலக்குளம், திருவிதாங்கோடு, மேக்காமண்டபம், திருவட்டார், திருவரம்பு , பனச்சமூடு , களியக்காவிளை, நித்திரவிளை, பேச்சிப்பாறை, கருங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

error: Content is protected !!