Kanyakumari

News July 13, 2024

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

image

ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரியில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இன்று (ஜூலை 13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் கார்டில் காணப்படும் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அதை சரி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டில் உள்ள குறைகளை இந்த முகாமில் கலந்து கொண்டு உடனே சரி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் காலமானார்

image

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அம்சி பகுதியைச் சேர்ந்த அதிமுக மூத்த முன்னோடியான எஸ்.எம். மோகன் உடல்நல குறைவால் நேற்று காலமானார். எம்ஜிஆர் காலத்திலே அதிமுகவில் இருந்து வரும் இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முன்சிறை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், தமிழ்நாடு கைத்தறி கழக தலைவராகவும் இருந்தவர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.

News July 13, 2024

குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம்

image

குமரி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறு கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

குமரி மக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

image

குமரி மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சம்பந்தப்பட்ட தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகள் பற்றி தெரிந்துகொள்ள Facebook, Twitter, Instagram ல் Kanniyakumari District Police என்ற பெயரில் உள்ள சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.3.75 லட்சம் மோசடி

image

குமரி சிதறால் பகுதியை சேர்ந்த சுரேஷ்(45), புன்னை நகர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறார். இவர், கொல்லங்கோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி தினேஷ் குமாரிடம்(62), அவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3,75,000 பெற்றுள்ளார். ஆனால் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் தராமல் மோசடி செய்ததாக புகார் அளித்ததன்பேரில் நேசமணி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 11, 2024

குமரியில் ரவுடிகள் பட்டியல் ரெடி: எஸ்.பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு பிரிவுகளில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைப்பெற்று வருகிறது. ஏ, ஏ ப்ளஸ், பி, சி என நான்கு பிரிவுகளில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ ப்ளசில் 25 ரவுடிகளும் , ஏ பிரிவில் 120 ரவுடிகளும் , பி. சி பிரிவில் 1207 ரவுடிகளும் உள்ளனர். இவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

கன்னியாகுமரி அருகே ரயில் தடம் புரண்டது

image

குமரியிலிருந்து திப்ரூகர் செல்லும் விவேக் விரைவு வண்டி நாகர்கோவிலில் தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜினை பெட்டியில் இணைக்கும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது. ரயிலில் அச்சமயம் பயணிகள் யாரும் இல்லை. பராமரிப்புக்காக எடுத்துச் செல்லும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது – திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம்

News July 11, 2024

குமரியில் ‘கண் லென்ஸ்’ பொருத்தும் மருத்துவ முகாம்

image

குமரி மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அரசின் ‘கண் லென்ஸ்’ பொருத்தும் முகாம் நடைபெற உள்ளது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் என 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஜூலை 11, 12, 13, 25, 26, 29 தேதிகளில் பல்வேறு இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் தேர்வு செய்யப்படும் நோயாளிகளை அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இலவசமாக கண் லென்ஸ் பொருத்தப்படும் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

error: Content is protected !!