India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. இதனால், இம்மாவட்டத்தில் குழித்துறையில் 26.2மி.மீ, பாலமோர் 14.4 மி.மீ, கோழிப்போர் விளை 5.8 மி.மீ, சிற்றார்-1ல் 11.2, சிற்றார்-2மி.மீ, பேச்சிப்பாறை 12.2மி.மீ பெருஞ்சாணி 7.4 மி.மீ, புத்தன் அணை 7.2மி.மீ முள்ளங்கினாவிளை 10.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள கனகமூலம் காய்கனி சந்தை நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால் உருவாக்கப்பட்டது. கனகமூலம் சந்தை என்பது இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட மிகப்பெரிய சந்தை ஆகும். இந்த சந்தையின் மூலம் நேரடியாகச் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக சுமார் 20 ஆயிரம் குடும்பங்களும் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் பிறந்த தினமான நாளை (ஜூலை 15) காலை 9 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருக்கும் காமராஜர் சிலைக்கு குமரி மாவட்ட பாஜக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து பாஜக பொறுப்பாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை வில்லிசை வேந்தரும், தோவாளை ஊராட்சியின் வார்டு உறுப்பினருமான சந்தியாதேவி போதை விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால் அவருக்கு இவ்வாண்டிற்கான திருவள்ளுவர் விருது நேற்று (ஜூலை 13) நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண்: 06012 நாகர்கோவில் -தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதே போன்று ரயில் எண்: 06011 தாம்பரம்-நாகர்கோவில் சந்திப்பு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூலை 15) காலை 7.45 மணிக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 13) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஹோலிகிராஸ் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி உள்ளிட்ட 16 மையங்களில் தேர்வு நடைபெற்றது. குமரியில்
4940 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3306 மட்டுமே தேர்வு எழுதினர். 1634 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா படகு சேவை மற்றும் படகு குழாம் செல்லவும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி – ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மேற்சொன்ன வழித்தடத்தில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்லீப்பர் ரயில் இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.