India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகை குறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், பட்டாசுகளை டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்கக்கூடாது. தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. சிறுவர்கள் கையில் பட்டாசுகளை எடுத்து விளையாட கூடாது. வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் விவேக். இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில், விவேக்கின் அண்ணன் விக்னேஷ், நேற்று(அக்.,23) இரவு காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சொத்து தகராறில் காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்ட பொது விநியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ரேசன் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று(அக்.,23) காலை தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேசன் அரிசி மூடைகள் ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரயிலில் 35 வேகன்களில் இந்த அரிசி வந்தது. பின்னர் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகவும், சமூக வலைத்தளங்கள் & தொலைபேசி வாயிலாக உங்களுக்கு பரிசுப் பொருட்கள் கிடைத்திருப்பதாகவும் கூறி யாரேனும் பணமோ, OTP கேட்டாலோ பகிர வேண்டாம். இதுபோன்ற மோசடிகள் குறித்து சைபர் கிரைம் <

கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை கணக்கில் வராத 33200 ரூபாய் 33,200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு லஞ்சம் புரள்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் ஒன்றாக ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நபர் கேரளாவிற்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரப்பர் விலை தினசரி வீழ்ச்சியடைந்து வருகிறது நேற்று முன்தினம் 18,700 ரூபாயாக இருந்த 100 கிலோ ரப்பர், இன்று 300 ரூபாய் குறைந்து 18,400 ரூபாயாக உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மாமியார் கொடுமை குற்றச்சாட்டில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி இன்று (அக்டோபர் 23) விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 37.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், மாம்பழத்துறை ஆறு-30 மி.மீ, ஆணைக்கிடங்கு-29.6 மி.மீ, தக்கலை-22.4 மி.மீ, குளச்சல்-18.2 மி.மீ, இரணியல்-14.4 மி.மீ, ஆரல்வாய்மொழி-12 மி.மீ, கோழிபோர் விளை-10.2 மி.மீ, நெய்யூர்-7.5 மி.மீ, பூதப்பாண்டி-6.2 மி.மீ, சிவலோகம் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

குமரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதை போன்று மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோதையாறு, கல்லாறு, முத்துக்குளி வயல் போன்ற பகுதிகளிலும் மழை அவ்வப்போது பெய்கிறது.

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கீரிப்பாறை மற்றும் காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கீரிப்பாறை மற்றும் காளிகேசம் சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தடை விதித்துள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.