Kanyakumari

News October 25, 2024

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் நடவடிக்கை!

image

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்டதீ யணைப்பு அதிகாரி சத்யகுமார் கூறியுள்ளார். நேற்று அவர் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில், பட்டாசு கடையில் 2 வாயில்கள் இருக்க வேண்டும். விற்பனை நடக்கும்போது அவசர வெளியேறும் வாயில் திறந்திருக்க வேண்டும். பட்டாசு கடையில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் வைக்கக்கூடாது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

குழித்துறை அருகே வழக்கறிஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி

image

குழித்துறை அருகே சாங்கையை சேர்ந்தவர் பெனட்ராஜ், 45. வழக்கறிஞரான இவரிடம், விஜயகுமார் மற்றும் சுதிர் ஜேக்கப் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.7 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 25, 2024

குமரி அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 15.32 மற்றும் 15.42 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.51அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 64.66 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15.9 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 14.7 அடி நீரும் இருப்பு உள்ளது.

News October 25, 2024

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்: நடவடிக்கைக்கு உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இவ்வாறு விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.

News October 25, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய நிகழ்வுகள்

image

➤ நாகர்கோவில் BSNL அலுவலகம் முன்பு இன்று(அக்.,25) காலை 10 மணிக்கு 4G, 5G சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். ➤ கோணம் அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பகல் 1 மணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் பணி நியமனம் செய்வதை கண்டித்து வாயிற் முழக்கப் போராட்டம். ➤ மாலை 4 மணிக்கு திருவட்டாரில் நா.த.க.வினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்.➤ மாலை 4 மணி மனிதநேய மக்கள் கட்சி இளைஞரணி பொதுக்கூட்டம்.

News October 25, 2024

TN-Alert ஆப் டவுன்லோடு செய்து எச்சரிக்கையாக இருங்கள்.!

image

TN-Alert App பொதுமக்களுக்கு வெப்பநிலை, மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது. இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும்,மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 25, 2024

போலீசாருக்கு குமரி எஸ்.பி அறிவுரை

image

தற்போது சமூகத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் நேரத்தை ஆராய்ந்து பார்க்கின்ற போது குறிப்பாக மதிய வேளையில் 1 முதல் 5 மணி வரை உள்ள வேளையில் நடைபெறுகிறது என்ற குறிப்பு தெரிய வந்துள்ளதால் போலீசார் இந்த நேரத்தில் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என குமரி எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

ராமேஸ்வரம் போலீசாருக்கு உதவிய குமரி போலீஸ்

image

ராமேஸ்வரம் போலிசார் நீதிமன்றம் அழைத்து சென்ற போது சந்துரு என்ற திருடன் தப்பி ஓடினான். இது சம்பந்தமாக இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். WANTED NOTICE மூலமாக திருடனை தேடி வந்த நிலையில் கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் சுந்தர்மூர்த்தி திருடனை பிடித்தார். அவருக்கு ராமேஸ்வரம் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

News October 25, 2024

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி, தனி ஆர்.ஐ மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோர் ஐரேனிபுரம் பகுதியில் இன்று (அக்.24) வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முற்பட்டபோது நிறுத்தாமல் சென்றது. துரத்திச் சென்ற போது காரை சென்னி தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2200 கிலோ ரேஷன் அரிசியும் காரும் பறிமுதல் செய்யபட்டது.

News October 24, 2024

BREAKING: குமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அழகுமீனா நாளை (அக்.25) மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். மழை காரணமாக நாளை மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படாது.

error: Content is protected !!