India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். இன்று மல்லிகை பூ ரூ.400-க்கும், பிச்சி பூ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது, இன்னும் நாட்கள் செல்ல செல்ல பூ விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க மானியம் அளிக்கப்படும் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ணைக்கு தேவையான கொட்டகை இதர செலவுக்காக 50% மானியத்தில் ரூ.1,56,875 அரசால் வழங்கப்படும். மீதி 50% பயனாளிகள் பங்களிப்பு ஆகும். 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 22ஆம் தேதி காலை 9 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். எனவே குமரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்து பயன் பெறுமாறு ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் இந்து அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர ஆணையராக இருந்த அழகுமீனா குமரி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மரியாதை நிமித்தமாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சென்னையில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அமரர் வேலாயுதன் வில்லுக்குறி அருகே கீழகருப்புகோட்டில் நிறுவப்பட்டுள்ள நினைவு மணிமண்டபம் திறப்பு விழா ஜூலை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். மணிமண்டபம் திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு குமரி மாவட்ட பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வரும், பி.என்.ஸ்ரீதர் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு, குமரி மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 16) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. குளச்சல், முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. இதனையடுத்து, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 6,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.