India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக ஒருங்கிணைந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நேற்று இரணியலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக போராடிய இயக்கம் திமுக. முதல்வர் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை வைத்து சொல்கிறோம். மக்கள் திமுக பக்கம் உள்ளனர் எனக் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக
இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் (ஜூலை-18) பதவி ஏற்றுக்கொண்டார்.
மிக உயரிய பொறுப்பினை வகிக்கும் நீதியரசர் மகாதேவனின் பணி சிறக்க குமரி மாவட்ட மக்கள் சமூக வலைதலங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குமரி மலையோர பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக (வெள்ளிக்கிழமை) நீடிக்கிறது.
குமரி மாவட்டம், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட 20 பேர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை.18) இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஆயுதப்படை சாலை அருகே உள்ள புகழ்பெற்ற புனித அல்போன்சா திருத்தல ஆலயத்தின் திருவிழா இன்று (ஜூலை.19) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிககளை நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோலாகலமாக நடைபெறும் இத்திருவிழாவானது தேர் பவனியுடன் ஜூலை 28-ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவுள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர். பி. என். ஸ்ரீதர், அங்கான்வாடி மையத்தில் பணியின் போது மரணமடைந்த இரண்டு அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.