Kanyakumari

News October 26, 2024

வெட்டு பட்டவர் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்!

image

குமரி சரக்கல்விளை அருகே பூங்கோவில் ஐயப்பன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய 2 பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜெய்கணேஷ் இன்று(அக்.,26) அதிகாலை உயிரிழந்தார். கோட்டார் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 9 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2024

தேங்காய் பட்டினம் துறைமுகம்: IIT-யிடம் கருத்து கேட்க முடிவு

image

குமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், துறைமுகம் அமைக்கப்பட்டது முதல் தொடர்ந்து மீனவர்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 27 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மீனவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, துறைமுக கட்டுமானம் குறித்து ஐஐடி அதிகாரிகளிடம் மீனவர்களின் கருத்துகள் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

தீபாவளி பண்டிகை: குமரியில் களமிறங்கும் 1,000 போலீஸ்!

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அளவுக்கதிகமாக காணப்படும். இந்நிலையில், மக்கள் பாதுகாப்பை கருதி மாவட்டத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேற்று(அக்.,25) தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

மத்திய அரசுக்கு குமரி எம்.பி வேண்டுகோள்

image

உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் புகழை உலகமெங்கும் கொண்டு சென்றுவிட வகையிலும், அவருக்காக கன்னியாகுமரியில் கட்டப்பட்ட சிலையின் சிறப்பை பறைசாற்றும் வகையிலும், திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கடிதம் வாயிலாக குமரி எம் பி விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 26, 2024

குமரி மாவட்டத்தில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் என இந்த ஆண்டில் மட்டும் 45 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

News October 26, 2024

அரிவாளுடன் மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது

image

குமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியில் சென்ற கனிமவள வாகனத்தை சிலர் தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் அரிவாளுடன் தகராறு செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில், அஞ்சு கிராமம் போலீசார் அந்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், குமாரபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தர் என்பவரை இன்று மாலை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 25, 2024

குமரி மாவட்டத்தில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் என இந்த ஆண்டில் மட்டும் 45 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

News October 25, 2024

குமரி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “ குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை 1, சிற்றாறு அணை 2 ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீர் அதிகமாகும் போது மேற்குறிப்பிட்ட அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படும். எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

குமரி மாவட்ட எஸ்.பி அறிக்கை வெளியீடு

image

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மழைக்காலமானதால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும்; தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்; மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்; தேவையற்ற வதந்திகளை பரப்பக் கூடாது” என்று கூறியுள்ளார்.

News October 25, 2024

பெண்களுக்கு புகார் பெட்டி வழங்கிய குமரி கலெக்டர் மீனா

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இன்று(அக்.,25) நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகு மீனா நிறுவனங்களுக்கு வழங்கி உரையாற்றினார்.