India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்திற்கு நேற்று (ஜூலை-21) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வருகை தந்தார். இதையடுத்து அவரை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். மேலும் குமரி மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார். நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு சவாரி, கடலின் நீர்மட்டம் காரணமாக தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்மட்டம் சரியான பிறகு படகு சவாரி இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி, அமாவாசை போன்ற நேரங்களில் கடல் உள்வாங்குதல் மற்றும் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி அறிவியல் பேரவை சார்பில் வருடம் தோறும் ஆசிரியர் திலகம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-24 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 9942758333 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது mullanchery@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி பொறியாளர் அலுவலகத்தில் சாம் செல்வராஜ் என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஒப்பந்ததாரர்களிடம் சாம் செல்வராஜ் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்பேரில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாம் செல்வராஜ் லஞ்சம் வாங்குவதை கண்ட அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்த 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பைக் ஓட்டுவதை தடுக்கும் விதத்தில் சிறுவர்கள் பைக்குடன் பெட்ரோல் நிலையத்திற்கு வந்தால் பெட்ரோல் கொடுக்க கூடாது என குமரி மாவட்ட காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் பைக் ஓட்டும்போது சாகசங்கள் செய்வது, அதிவேகமாக ஓட்டுவது ஆகிய செயல்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பெட்ரோல் நிலையங்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அழகுமீனா நாளை (ஜூலை 21) காலை 9.15 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இவர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்தவர் ஆவார். நாளை நடைபெற உள்ள ஆட்சியர் பொறுப்பேற்பு நிகழ்வின்போது பல்வேறு துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர். தற்போது ஆட்சியராக உள்ள ஸ்ரீதர் அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
கலைஞர் ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 14 ஆயிரம் பேருந்துகள் தான் வாங்கப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். குமரி மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை இன்று கொடியசைத்து துவக்கி வைத்து பேசிய அவர், தமிழகத்தைவிட வெளி மாநிலங்களில் பஸ் கட்டணம் அதிகமாக வசூலிக்கின்றனர் என்றும் பேசினார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.