Kanyakumari

News July 22, 2024

குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.

News July 22, 2024

நாளை குமரிக்கு வரும் அண்ணாமலை

image

தமிழகத்தில் முதல் பாஜக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் சி. வேலாயுதம் (1996-2001). இவர் கடந்த மே மாதம் 8ம் தேதி காலமானார். அவரது சொந்த ஊரான கருப்புக்கோட்டில் அவருக்கு
மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை குமரிக்கு வருகிறார். அவரது வருகையை ஒட்டி குமரியில் அண்ணாமலை என்னும் ஹேஷ்டேகை பா.ஜ.வினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

News July 22, 2024

குமரி மாவட்ட சுற்றுலா திட்டம் குறித்த கூட்டம்

image

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் நடந்தது. மாத்தூர் சூழியல் சுற்றுலா மையம், சிற்றாறு 2 அணைபடகு சவாரி, திற்பரப்பு அருவி,
முட்டம் மேம்பாடு பணிகளை விரைந்து முடிப்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. 

News July 22, 2024

ஒரே நாளில் 388 கோரிக்கை மனுக்கள்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 388 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News July 22, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது.

News July 22, 2024

பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகள் ஆய்வு 

image

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளபெருக்கு அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். அணைகளின் மதகுகள் சீராக இருக்கிறதா என்றும், மழைமானி, நீர்வரத்து, நீர்மட்ட அளவுகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதனையும் நேரில் பார்வையிட்டு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

News July 22, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 26ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கடந்த ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் ஆட்சித்தலைவரால் நேரில் பெறப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News July 22, 2024

கன்னியாகுமரியில் 200 பவுன் நகை கொள்ளை

image

நாகர்கோவில் அடுத்த வடசேரி சக்தி கார்டனை சேர்ந்த பகவதியப்பன், ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி. நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு இவரும் இவரது மனைவியும் சென்று விட்டு நேற்று (ஜூலை – 21 ) இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 லட்ச ரூபாய் மற்றும் 200 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 22, 2024

கன்னியாகுமரி ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் நாளை முதல் ஜுலை.31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாகர்கோவில்-தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று, நாளை, 25, 29, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக எழுப்பூருக்கு சென்றடையும். இதேபோல், பல்வேறு ரயில்கள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!