India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் மாநகராட்சி கோர்ட் ரோடு வாகன நிறுத்துமிடத்தில் பொதுக்கழிப்பறை கட்டுவதற்கான இடம், கோர்ட் சாலை ஆகிய இடங்கள் மற்றும் பூங்காவில் பழுதடைந்து காணப்படும் விளையாட்டு உபகரணங்களை இன்று மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அவற்றை சீரமைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். மாநகர நல அலுவலர் ராம்குமார் செல்வன், திட்டமிடல் அலுவலர் வேலாயுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.
குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். இந்த மூன்று மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு, ஆடி பூரம் ஆகியவை அம்மனுக்கு உகந்த நாட்களாகும். அந்த வகையில் நேற்று(ஜூலை 23) ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் குமரி எம்எல்ஏ N.தளவாய் சுந்தரம் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தார். பின்னர் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வரும் 25ஆம் தேதி குமரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். அதன்படி அருவிக்கரை, அயக்கோடு , ஊராட்சிகளுக்கு மாத்தூர் நலக்கூடத்திலும் மாங்காடு, முஞ்சிறை, வாவறை ஊராட்சிகளுக்கு மாங்காடு நலக்கூடத்திலும் ஞாலம், தடிக்காரன்கோணம், அருமநல்லூர் ஊராட்சிகளுக்கு அந்தரபுரம் நலக்கூடத்திலும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் நேற்று(ஜூலை 22) விசைப்படகில் சென்று கடலில் வலை வீசியபோது ராட்சத திருக்கை மீன்கள் சிக்கியது. இரவில் மீன்களை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் கரையில் இறக்கினர். பிடிபட்ட 6 டன் கொண்ட10 திருக்கை மீன்கள் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது. பின்னர் அந்த திருக்கை மீன்களை வியாபாரிகள் கிரேன் மூலம் லாரியில் தூக்கி வைத்து கொண்டு சென்றனர்.
நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 994 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. இவை நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. பின்னர் வேகன்களில் இருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், செங்கவிளை – குமரி இடையே 20% பணிகளே நிறைவடைந்து கிடப்பில் போடப்பட்டுள்ள 4 வழிச்சாலை பணியை தொடங்குதல்; குமரி-களியக்காய்விளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்தல் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது. களியக்காய்விளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க எம்.பி விஜய் வசந்த் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி செல்லச்சாமி என்பவரின் வீட்டில் கடந்த 16 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது நடந்த சில நாட்களிலேயே நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி பகதியப்பன் என்பவரின் வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது. எனவே விஞ்ஞானிகள் வீடுகளை குறி வைத்து கொள்ளை நடைபெறுகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் நேற்று (ஜூலை-21) பொறுப்பேற்று கொண்டார். இந்த வகையில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை-22) சந்தித்தனர். மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அவரிடம் கலந்துரையாடல் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.சுகிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.