India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குளச்சல் அரசு மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை இ.எஸ்.ஐ. துணை இயக்குனர் அருண் தெரிவித்ததாவது; இ.எஸ்.ஐ.யின் (தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்) நிகழ்ச்சியான “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0” குறைதீர்ப்பு கூட்டம் ஜூலை 29ஆம் தேதி நாகர்கோவில், கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இ.எஸ்.ஐ. காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வைப்பு நிதி உறுப்பினர்கள். ஓய்வூதியர் உள்பட அனைவரும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்றார்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் ஜுலை 30 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஆளில்லா வீடுகளில் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தனிப்படை போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்யும் வகையில் இரவு நேர ரோந்து பணி 10 – 2 மற்றும் அதிகாலை 2 – 6 மணி வரை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் தொலை தொடர்பு சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆட்கள் தேவைபடுகிறது. இதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜுலை.26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என நாகர்கோவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 377வது விதியின் கீழ் இன்று சமர்ப்பித்த கோரிக்கையில் விஜய் வசந்த் எம்.பி குறிப்பிட்டிருப்பதாவது, “தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே முதல் பெய்து வரும் மழை காரணமாக குமரி மாவட்டத்திரப்பா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலையில் பெய்யும் மழையானது, ரப்பா் பால்வடிவதை முடக்கி வருகிறது. ரப்பா் விலை உயா்ந்தபோதும், அதன் பலனை விவசாயிகள் அடைய முடியாத வகையில் உற்பத்தி முடங்கியுள்ளது.
கோவை பி.ஆா்.எஸ். பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கோவை ரைபிள் சங்கம் சாா்பில் நடைபெற்ற தூப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,650 வீரா் – வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இதில், கன்னியாகுமரி அமிா்தா வித்யாலயம் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவியான ஈச்சன்விளையை சோ்ந்த விஷ்மிதா என்பவா் 16 வயதுக்குள்பட்ட 10 மற்றும் 50 மீட்டா் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்று 4 தங்கப் பதக்கம் வென்றார்.
கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், அதிமுக தக்கலை ஒன்றிய செயலாளருமான மெர்லியண்ட் தாஸ் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிதாக ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் அழகுமீனாவை நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.