Kanyakumari

News July 27, 2024

குமரியில் ரம்புட்டான் பழ சீசன் துவங்கியது

image

குமரியில் ரம்புட்டான் பழ சீசன் துவங்கியது. பூ மற்றும் காய் பிடிக்கும் காலமான மே மாதம் முதல் தொடர் மழை பெய்ததால் மரங்களில் இருந்து பூ, காய்கள் அதிக அளவில் உதிர்ந்தது. இதனால் மரங்களில் ரம்புட்டான் காய்கள், பழங்கள் குறைவாகவே காணப்படுகிறது.
ரம்புட்டான் பழங்களின் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக உள்ளது. குலசேகரம் பகுதியில் இந்த பழங்கள் கிலோ ரூ.340 க்கு விற்கப்படுகிறது.

News July 27, 2024

தொடர் உண்ணாவிரதம் எம்எல்ஏ அறிவிப்பு

image

களியக்காக்களை அருகே கோழி விளை பகுதியில் 4823 என்ற எண்ணுடைய பாருடன் கூடிய டாஸ்மாக் இயங்கி வருகிறது. இதன் அருகில் ஆலயம், கோவில், பள்ளிவாசல், மருத்துவமனை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நெருக்கடியான இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரி நாளை மறுநாள் (ஜூலை-29) முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.

News July 27, 2024

நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி

image

குமரி மாவட்டம், வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழியை சேர்ந்த நிம்மி வி.எம்.ஜோஷி(30), நாகர்கோவில். ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது ஒன்றரை வயது குழந்தை கெவின் சுமித் நேற்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வீட்டு முன் இருந்த ஸ்டீல் பாத்திரத்தில் இருந்த நீரில் மூழ்கி இறந்து போனான். சம்பவம் குறித்து திருவட்டாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 26, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

கம்பிகளால் தயாரிக்கப்பட்ட தூண்கள் நிறுவும் பணி நிறைவு

image

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கண்ணாடி இழை கூண்டுகளை பொருத்துவதற்காக இரும்பு கம்பிகளால் தயாரிக்கப்பட்ட தூண்கள் நிறுவும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தற்போது இரும்புத் தூண் நிறுவும்
பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் கண்ணாடி இழை வளைவுகள் பொருத்தப்படுகிறது. அதன் பின்னர் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படும்.

News July 26, 2024

குமரி கடலில் கவிழ்ந்த படகு; உயிர் தப்பிய 5 மீனவர்கள்

image

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் ததேயூஸ்(52). இவர் 4 மீனவர்களுடன் வள்ளத்தில் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துவிட்டு நெத்திலி மீனுடன் கரை திரும்பியபோது ஆக்ரோஷமாக பொங்கிய அலையில் படகு கவிழ்ந்து. இந்நிலையில், 5 மீனவர்கள் அருகில் படகில் வந்த வேறு மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

News July 26, 2024

குமரி மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலக ஊழியர்களும் 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். அரசு ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ எந்த பொருள்களையும் கொண்டு தன்னை சந்திக்கக் கூடாது எனவும் ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 26, 2024

குமரியில் படகு போக்குவரத்து தொடக்கம்

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் பூம்புகார் படகு போக்குவரத்து கடலின் போக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடலின் தன்மை இயல்பு நிலைக்கு திரும்பியதால் வழங்கம்போல் இன்று படகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News July 26, 2024

குமரிக்கு உள்ளூர் விடுமுறை வேண்டும்: எம்.எல்.ஏ

image

கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும். திருவிழா நிறைவு நாளில் தூக்க நேர்ச்சை மிகவும் பிரசித்திபெற்றதாகும். தூக்க திருவிழாவை காண அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.

News July 26, 2024

குமரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழக மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் முன் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!