India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட குளங்கள் இருப்பது விவசாயத்துக்கு பக்கபலமாக உள்ளது. இதில் 2040 குளங்கள் பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 1512 குளங்கள் தற்போதைய மழையால் நிரம்பின. ஏனைய குளங்கள் பாதியளவு நிரம்பியுள்ளன. பல பகுதிகளில் குளங்கள் தூர்வாரப்படாததால் விவசாயத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனை தூர்வாரவேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

குமரியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி 2019-ல் ஓய்வு பெற்ற ரீட்டா மேரியின் ஓய்வூதிய பண பலன்களை பொய் புகாரின் பேரில் அதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்று நீதிபதி சத்தியநாராயண பிரசாத் விசாரணையின் போது, பலன்களை இழுத்தடிப்பது சரியல்ல. மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகை ரூ 21,82,455-ஐ வட்டியுடன் 8 வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கன்னியாகுமரியில் சீசன் தொடங்குவதை முன்னிட்டு வாகன நிறுத்த கட்டணம் வசூல் கோவளம் சாலையில் இருந்து சிலுவை நகர் செல்லும் சாலை வரையில் சீசன் கடைகள் அமைத்தல், அருங்காட்சியகம் சாலையில் சீசன் கடைகள் அமைத்தல், சன்னதி தெருவில் சீசன் கடைகள் அமைத்தல், 30 LED மின் விளக்குகள் அமைத்தல், ஒலிபெருக்கி மூலம் 20 இடங்களில் ஒலிபரப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இன்று ஏலம் நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ் இல்லாத மாற்றுத்திறனாளிகள் 3219 பேர் உள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழித்துறை கன்னியாகுமரி பத்மநாபபுரம் குளச்சல் பூதப்பாண்டி குலசேகரம் சேனன் விளை கருங்கல் அரசு மருத்துவமனைகளில் இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார்.

குமரியில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதன்படி பேச்சிப்பாறை 12 மி.மீ, சிற்றார் 1ல் 4, சிற்றார் 2ல் 6.2, நாகர்கோவில் 2.2, மயிலாடி 7.8, இரணியல் 27, குருந்தன்கோடு 4, கோழிப்போர்விளை 15.6, மாம்பழத்துறையாறு 11, ஆனைக்கிடங்கு 10.4, களியல் 5.2, குழித்துறை 1.6, திற்பரப்பு 15.2, முள்ளங்கினாவிளையில் 22.4 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. மேலும், தக்கலையில் அதிகபட்சமாக 59.4 மி.மீ மழை பெய்திருந்தது.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் 7.30 மணிக்கு பரத நாட்டியம், 9.30 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு அய்யப்ப சரிதம் கதகளி ஆகியனவும், நாகர்கோவில் நாகராஜா கோயிலில் காலை 9 மணிக்கு பால்குட அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, உசரவிளை மகாசக்தி இசக்கி அம்மன் கோயிலில் 9 மணிக்கு வில்லிசை, இரவு 8 மணிக்கு அம்மன்பவனியும் நடைபெற உள்ளன.

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினராக உள்ள தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த குழுவுடன் இன்று இரவு கன்னியாகுமரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவர் இந்த குழுவுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஆய்வு மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு சுற்றுப்பயண விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் தேரூர் அருகே செல்வம் என்ற தூத்துக்குடி செல்வத்தை போலீசார் பிடிக்க முயன்ற போது போலீசாரை அவர் தாக்கியதைத் தொடர்ந்து, செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குமரி ஆட்சியரகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மழையினால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் இந்த வீடுகள் சேதமடைந்துள்ளன.

வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளருமான விஜய் வசந்த் இன்று (நவ.04) சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் வயநாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பிரியங்கா காந்திக்கு ஓட்டு கேட்டு விஜய் வசந்த் பிரச்சாரம் செய்தார்.
Sorry, no posts matched your criteria.