India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி அருகே கோவளத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இது தொடர்ந்து அந்த காரையும் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த அஜின், சிஜின் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு அதன் தலைவர் காந்திராஜன் எம். எல்.ஏ.தலைமையில் தூத்துக்குடியில் இருந்து இன்று கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் 12 எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். குமரி மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்ரமணியம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த குழுவினர் நாளை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன பாதுகாப்பாளர் அலுவலகத்தில் ரூ.10000 லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட பால்ராஜை மாவட்ட வனப் பாதுகாவலர் பிரசாந்த் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் பறவை பாதுகாவலர் இந்திரன் பணி நேரத்தில் அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்ததால் அவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று (நவ.5) இரவு கன்னியாகுமரி வருகிறது. இந்தக் குழுவினர் நாளை குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்கள். அப்போது இந்த குழுவினரை பொதுமக்கள் சந்தித்து தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என குமரி ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட அரசு மரமண்டி, வடசேரியில் பணிபுரிபவர் மிகைப்பணியிட காவலர் எஸ்.பால்ராஜ். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர், ஆணையின் படி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தகவலை செய்திமக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் செயல்பட்டு வரும் தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல்துறையின் தனி குழு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

பெண்குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பெண் குழந்தை முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த பெண் குழந்தைக்கான மாநில அரசு விருது குமரி மாவட்டத்தில் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் தகுதியானவர்கள் மாநில அரசின் விருது பெற 21.12.2024 க்குள் தமிழக அரசின் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு நடத்தினர். இதில் ரூ.10000 லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு, அதன் தலைவர் வேடச்சந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் தலைமையில் இன்று கன்னியாகுமரி வருகிறது. 19 பேர் அடங்கிய இந்த குழு தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக குமரிக்கி வருகின்ரனர். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கி நாளை (நவ6) கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக காளிகேஷம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள ஆற்றில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். மழை பெய்து வந்ததன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.