Kanyakumari

News November 6, 2024

குமரி மீனவர்களின் கவனத்திற்கு

image

மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடலோர காவல் படை, கப்பற்படை பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும், சேருவதற்கு 90 நாட்கள் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் கன்னியாகுமரியில் 4-வது கட்டமாக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்மூலம் நடத்தப்படவுள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள் இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் மீன்துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் இன்று கேட்டுக் கொண்டனர்.

News November 6, 2024

குமரி இளம்பெண் கொலை? விசிக நிர்வாகி அறிக்கை

image

விசிக நாகர்கோவில் மாவட்ட செயலாளர் அல்காலித் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சரல் பகுதியைச் சேர்ந்த ரெத்தின சாமி மகள் அஜிதாவிற்கும் சூரப்பள்ளத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அஜிதா தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வரதட்சணைக்காக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும்” என குறிபிட்டுள்ளார்.

News November 6, 2024

குமரியில் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று எட்டாம் தேதி வரை வீச கூடும் என்றும் எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகமழை பெய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 6, 2024

குமரி முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோயில், மறக்குடி தெருசுப்பிரமணியசாமி கோயில், தேரிளை குண்டல் முருகன் கோயில், மருங்கூர் திருமலை சுப்ரமணியசாமி கோயில், தோவாளை முருகன் கோயில், சொக்கர்கிரி மலை முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை முருகன் கோயில் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.

News November 6, 2024

குமரியில் ரேசன் கடை வேலை! நாளை கடைசி நாள்

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை(நவ.7) மாலை 5.45 மணிக்குள் <>ONLINE<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் குமரியில் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். SHARE IT.

News November 6, 2024

குமரியில் 1,266 பேருக்கு பணி நியமனம்

image

கன்னியாகுமரியில் வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி இம்மானுவேல் நேற்று கூறியதாவது,”2023 மார்ச் முதல் 2024 ஆண்டு மார்ச் வரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த 9 தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்களில் 413 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 6858 பேர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். 1266 பேர் பணி நியமனம் பெற்றனர். தொடர்ந்து அவ்வப்போது போது வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்” என்றார்.

News November 6, 2024

தோவாளையில் பூக்களின் விலை விவரம்

image

தோவாளை பூமார்க்கெட்டில் பூக்களின் தற்போதைய விலை விவரம் வருமாறு; அரளிப்பூ கிலோ ரூ140, பிச்சி ரூ.300 மல்லிகை ரூ.1200, முல்லை250, கனகாம்பரம் ரூ.300, வாடாமல்லி ரூ60, சிவப்பு கேந்தி ரூ.85, சம்பங்கி ரூ.150,முல்லை. ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.120, கோழிப்பூ ரூ.50, மஞ்சள் கேந்தி ரூ.80, வெள்ளை சிவந்தி ரூ.230, துளசி ரூ.30 100 தாமரை ரூ800 விலையிலும் விற்பனையானது.

News November 6, 2024

குமரி மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

# காலை 10 மணிக்கு எல்ஐசி முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க கேட்டு பெற்றூரணி மடம் LIC கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.# மார்த்தாண்டத்திலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.# மாலை 5 மணிக்கு கருமாவிளையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெறுகிறது.#அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

News November 6, 2024

தீபாவளி கொண்டாட வந்த மாணவி தற்கொலை!

image

குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் இடைத்தெங்கு பகுதி சந்திரன் மகள் ஷாலு(17) பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இவர் நேற்று(நவ.,5) மாலை கல்லூரிக்கு புறப்பட இருந்தார். அப்போது, அவரது அறைக்கு சென்று பார்த்த அவரது தாயார் ஷாலு தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2024

குமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 6500 திருப்பதி லட்டு வருகை

image

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று கோவிலுக்கு திருப்பதியில் இருந்து 6500 லட்டு வந்துள்ளது. இதில் கடந்த 2 நாட்களில் 4 ஆயிரம் லட்டு விற்பனை ஆகி உள்ளது. இன்னும் 2 ஆயிரத்து 500 லட்டு விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!