India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தக்கலை அருகே சரல் விளை என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபி வெட்டிக் கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக இசக்கிமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த கொலையில் இசக்கிமுத்து தம்பி தளவாய், மற்றும் ஐயப்பன், வன்னியப் பெருமாள், பாண்டி ஆகிய மேலும் 4 பேரை ஆரல்வாய்மொழி போலீசார் இன்று கைது செய்தனர்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் புகழஞ்சலி கூட்டம் கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளை பெரியார்நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஹாலில் நாளை(நவ.9) காலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நாளை காலை 9 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை(9.11.2024) காலை 8.30 கனமழை முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணுசக்தி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட மாடல் அரசும், அதன் காவல்துறையும் தமிழ்நாட்டில் யாரும் எந்தப் பிரச்சினைக்காகவும் எந்த வகையிலும் இயங்கக் கூடாது என்பதில் மிகவும் குறிப்பாக இருக்கிறது. ஓர் அரங்கக் கூட்டம் நடத்துவதற்குக்கூட ஏராளமானத் தொந்திரவுகள் தருகிறார்கள். சமூகக் களப்பணியாளர்கள் இது குறித்துப் பேசியாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 15.19 மற்றும் 15.29 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.2 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 67.09 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 25 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.2 அடி நீரும் இருப்பு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தோவாளை பூ மார்க்கெட்டில் இன்று(நவ.,8), அரளிப்பூ கிலோ ரூ.170, பிச்சி ரூ.1150, மல்லிகை ரூ.1700, கனகாம்பரம் ரூ.100, வாடாமல்லி ரூ.80, சிவப்பு கேந்தி ரூ.80, சம்பங்கி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.140, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் கேந்தி ரூ.70, துளசி ரூ.30, 100 தாமரை ரூ.500, மருக்கொழுந்து ரூ.130, கொழுந்து ரூ.120, பச்சை ரூ.8 விலையிலும் விற்பனையானது.

குமரி SP சுந்தரவதனம் நேற்று(நவ.,7) கூறியதாவது, மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் மோசமாக இருப்பதாலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்குவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகள் அதிகம் நடக்கும் 95 இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வாகன விபத்தில் 1030 பேர் பலியாகி உள்ளதாகவும், தற்போது விபத்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாகர்கோவில் – காந்திதாம் மற்றும் நாகர்கோவில் விரைவு ரயில் நவ.,26ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலும், நவம்பர் 29ஆம் தேதி முதல் காந்தி தாமிலிருந்து புறப்படும் ரெயிலும் LHB பெட்டிகளாக மாற்றப்பட இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக ரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

#காலை 10 மணிக்கு பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் கிறிஸ்டோபர் ஜோபி படுகொலையை கண்டித்து நாகர்கோவில் பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. #மாலை 4 மணிக்கு சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ராஜேஷ் திரையரங்கம் முன்பு எஸ்டிபிஐ முற்றுகை போராட்டம்.
Sorry, no posts matched your criteria.