India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் அரிசி விலை மூட்டைக்கு ஆயிரம் முதல் 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து நாளை (அக்.27) புதுச்சேரிக்கு பகல் 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து நாளை செல்லாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று (அக்.26) குளச்சலில் 92 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பூதப்பாண்டியில் 75.8, அடையாமடையில் 68.5, பெருஞ்சாணியில் 64.2, மேல கோதையாரில் 64, மாம்பழத்துறை ஆறு அணைப்பகுதியில் 63, கீழகோதையாறு அணைப் பகுதியில் 63, புத்தன் அணையில் 62.4, பாலமோரில் 61.4, நாகர்கோவில் 60, குருந்தன்கோட்டில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.27) முதல் குமரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னைக்கு 60, கோவை 10, மதுரை 10, திருச்சி 10, திருப்பூர் 10 என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி விடுமுறை முடிந்து நவ.1,2,3 தேதிகளிலும் சிறப்பு பஸ் இயங்கும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை வேளிமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணை நிரம்பியது. அணை அதன் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டிய நிலையில் தற்போது அணைக்கு வினாடிக்கு 96 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களில் அதிக அளவு வழக்குகள் பதிவாகி வருகின்றன. திருமணம் ஆன 3 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் திருமண விவாகரத்து கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் 2,500 விவாகரத்து மனுக்கள் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குமரியில் குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செங்கல் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட செங்கல் தொழில் கூடங்கள் இருக்கின்றன. மழையினால் இந்த தொழில் கூடங்களில் செங்கல் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 1586 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 1624 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 261 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 310 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 426 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குமரி சரக்கல்விளை அருகே பூங்கோவில் ஐயப்பன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய 2 பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜெய்கணேஷ் இன்று(அக்.,26) அதிகாலை உயிரிழந்தார். கோட்டார் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 9 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், துறைமுகம் அமைக்கப்பட்டது முதல் தொடர்ந்து மீனவர்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 27 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மீனவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, துறைமுக கட்டுமானம் குறித்து ஐஐடி அதிகாரிகளிடம் மீனவர்களின் கருத்துகள் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.